தங்கத்தின் விலை, 20 விழுக்காடு வரை அதிகரித்தது, பொருளாதார மந்த நிலை நுகர்வோர் நம்பிக்கையை குறைத்தது ஆகிய இரண்டு காரணங்களால், இந்தியாவின் தங்கம் தேவை குறைந்துவிட்டது. இவ்வாறு உலக தங்கக் குழு தெரிவித்துள்ளது. 20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வரலாறு காணாத வகையில் இந்தியாவில் தங்கத்தின் தேவை, கடந்த காலாண்டில், 32 விழுக்காடு சரிந்துள்ளதாக, உலக தங்கக் குழு தெரிவித்து உள்ளது. தங்கத்தின் விலை, 20 விழுக்காடு வரை அதிகரித்தது, பொருளாதார மந்த நிலை நுகர்வோர் நம்பிக்கையை குறைத்தது ஆகிய இரண்டு காரணங்களால், இந்தியாவின் தங்கம் தேவை குறைந்துவிட்டது. இவ்வாறு உலக தங்கக் குழு தெரிவித்துள்ளது. இது குறித்து, அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலகளவில், தங்கத்தை இறக்குமதி செய்வதில், சீனாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. முடிவடைந்த காலாண்டில், இந்தியாவின் தங்கத்துக்கான தேவை, 32 விழுக்காடு சரிந்து, 123.9 டன்னாக குறைந்துள்ளது. மேலும், தங்கம் இறக்குமதியோ 66 விழுக்காடு குறைந்து, வெறுமனே 80.5 டன்னாக ஆகியுள்ளது. முன்னர் இறக்குமதி செய்த தங்கம், பழைய தங்கத்தை மறுசுழற்சி செய்வது ஆகியவற்றின் மூலம், தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், நாட்டின் மொத்த தங்கம் தேவை, 496.11 டன் ஆக சரிந்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டில் இதே காலத்தில், 523.9 டன்னாக இருந்தது. இதேபோல் நடப்பு ஆண்டின், முதல் ஒன்பது மாதங்களில் மொத்த இறக்குமதி, 502.9 டன்னாக குறைந்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டில், 587.3 டன்னாக இருந்தது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,328.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.