மாநிலங்களைப் பொறுத்தவரை, மிகச் சிறிய சிக்கல்களுக்குக் கூட ஆட்சி மாற்றம் நடந்து விடுகிறது. இந்திய அரசிலும் கூட ஆட்சி மாற்றத்திற்கு- சிக்கல்கள் காரணமாகத்தான் அமைந்திருந்திருக்கின்றன. ஆனால் இந்த முறை பாஜக ஆட்சியைப் பிடிக்குமா என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பிரம்மாண்டமாக பாஜக ஆட்சியைப் பிடித்தே விட்டது. எப்படி சாத்தியமானது? 26,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாஜகதான் இந்தியாவிற்கான சுதேசிக்கட்சி. பாஜகவிற்கு எதிரானவர்கள் விதேசிகள்; தேசத்துரோகிகள்! இதுதான் பாஜக ஊடகங்கள், காங்கிரசை ஊடாடிக் கெடுத்துவிட்டு தற்போது பாஜகவைத் தூக்கிப் பிடிக்கிற பார்ப்பனிய அதிகாரிகள், மற்றும் அவர்கள் நிறைந்திருக்கிற ஆதிக்கத் துறைகள்- வலிமையாக முன்னெடுக்கிற கருத்துப்பரப்புதல். ஒட்டுமொத்த வடஇந்திய அரசியல்வாதிகளும்- நாங்கள் தேசத்துரோகிகள் இல்லை என்று குப்புறப்படுத்து விடுகின்றனர். தென்னிந்தியாவில் அரசியல்வாதிகள் அப்படி இப்படி என்று துள்ளினாலும், நாங்களும் தேசத்துரோகிகள் இல்லை என்று குனிந்து விடுகின்றார்கள். இந்தியா என்ன உலகத்தையே அரவணைத்துப் போகிற தமிழகத்திடம்- பாஜகவின் மீது சவுக்கை சொடுக்க வேண்டிய பொறுப்பு முழுமையாக வந்து விடுகிறது. இந்த நிலையில், பாஜகவிற்கு குனிந்த தலையும், தமிழக மக்களுக்கு வாலும் என்பதாக (பாம்புக்கு தலையும், மீனுக்கும் வாலும் காட்டி நான் உங்கள் இனந்தான் என்று ஏமாற்றுகிற விலாங்கு மீன் போல) அதிமுக பிழைப்பு நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஒட்டுமொத்த தலைவலியும் திமுகவிற்குத்தான். பாஜகவை அப்புறப்படுத்தி இந்தியாவை முன்னேற்றத்தை நோக்கி நகர்த்த இப்போதைக்கு எந்த விடியலும் தென்படக் கணோம். மம்தாபானர்ஜிக்கு- அறிஞர் அண்ணா அவர்களின் திறமை வாய்க்கப் பெறுமானால் பாஜகவை வீழ்த்த அனைத்து பிற்புலங்களும் அமைந்திருக்கிறது. 1.அவர் மாநிலமான வங்காளம் வடக்கில் இருக்கிறது. 2.ஹிந்தி மொழியினரை விட அதிக மக்கள் வங்காளத்தை தாய்மொழியாகக் கொண்டிருக்கிறார்கள். 3.தமிழகம் போலவே, வங்களம் தனித்த மற்றும் பாரம்பரியமான மண். எதற்கு இத்தனை பீடிகையென்றால் பின்வரும் செய்திக்காகத்தான்: இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி குறித்த விவரங்களை நேற்று இந்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும், இந்தியத் தொழில் துறை உற்பத்தி 4.3 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. இது முந்தைய மாதம் இந்தியா சந்தித்த 1.1 விழுக்காடு வீழ்ச்சியை விட மிக அதிகமாகும். கடந்த 6 ஆண்டுகளில் இப்போதுதான் இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி மாபெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்தியாவின் எட்டு முன்னணி துறைகளான நிலக்கரி, உரம், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்புப் பொருட்கள், இரும்பு, பைஞ்சுதை, மின்சாரம் ஆகிய துறைகளின் உற்பத்தி 5.2 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. உற்பத்தித் துறையிலேயே அதிகபட்சமாக மோட்டார் வாகனங்கள், டிரைலர், செமி டிரைலர் வாகனங்களின் உற்பத்தி 24.8 விழுக்காடு குறைந்துள்ளது. வீட்டுஏந்துப் பொருட்கள் உற்பத்தி 23.6 விழுக்காடும், உலோகப் பொருட்கள் உற்பத்தி 22 விழுக்காடும் வீழ்ச்சி கண்டிருக்கின்றன. கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே இந்தியப் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும் நிலையில், நடப்பு மாதங்களில் தொழில் துறை உற்பத்தி வீழ்ச்சியடைந்தது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நடப்பாண்டுக்கான இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீடுகளும் குறைக்கப்பட்டு வருகின்றன. 6.1 விழுக்காடு வளர்ச்சி இருக்கும் என்று கட்டுப்பாட்டு வங்கியும், 6.5 விழுக்காடு வளர்ச்சி இருக்கும் என்று ஆசிய மேம்பாட்டு வங்கியும் கணித்துள்ளன. உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும்கூட இந்தியாவின் வளர்ச்சி குறித்த தங்களது மதிப்பீடுகளைக் குறைத்துள்ளன. இந்தியாவின் கடன் மதிப்பீடு தொடர்பான மூடீஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில், இந்தியாவுக்கு எதிர்மறையான மதிப்பீடு கொடுக்கப்பட்டிருந்தது. இது இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளைக் குறைக்கும் என்று அஞ்சப்படுகிறது. ஊர்திஉற்பத்தித் துறையில் வீழ்ச்சி, தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிநீக்கம், நலிந்துவரும் வங்கித் துறை போன்றவற்றால் இந்திய வளர்ச்சி மேலும் சீர்குலையும் என்று தெரிகிறது. இத்தனைக்கும் மோலக, வெறுமனே, அதிக பட்சமாகவே, 5விழுக்காடு மட்டுமாகவே இருந்த மாநில வரிகளை, சரக்குசேவை வரி என்று இந்தியாவிற்கும் சேர்த்து 18 விழுக்காடு என்று நான்கு மடங்கு வரி விதித்தும், இந்திய அரசுக்கு வருமானம் போதவில்லை. ஏனென்றால் வரி செலுத்தும் வகைக்கான நிறுவனங்கள், படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. நிறுவனத்தலைவர்கள் தற்கொலை கூட செய்து கொண்டிருக்கிறார்கள். நிறுவனங்கள் குறையக் குறைய, நிறுவனங்களின் வருமானம் முழுவதையுமே வரியாக வாங்கினாலும் பழைய நிலையை இந்தியா எட்டவே முடியாது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,334.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.