பன்னாட்டுச் சட்டங்கள், நடைமுறைகளைப் பின்பற்றாமல், நமது மீனவர்கள் மீது வன்முறையை முன்னெடுப்பது கண்டனத்திற்குரியது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் கண்டன மடல். 19,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தும் தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவர் எழுதியுள்ள மடலில், கோடியக்கரை அருகே ஞாயிற்றுக்கிழமை நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதை குறிப்பிட்டுள்ளார். இந்த அடாவடி- கடலோர பகுதியில் வசிக்கும் மீனவ மக்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், பன்னாட்டுச் சட்டங்கள், நடைமுறைகளை பின்பற்றாமல், நமது மீனவர்கள் மீது வன்முறையை முன்னெடுப்பது கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார். இவற்றை கண்மூடி வேடிக்கை பார்க்காமல் இதற்கு உரிய தீர்வு காண்பது ஒன்றிய, மாநில அரசுகளின் கடமையாகும் என அவர் கூறியுள்ளார். இலங்கைக்கு உரிய அழுத்தம் கொடுத்து, இந்தப் பாட்டில் நீடித்த அரசியல் தீர்வைக் காண வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.