Show all

பா.ஜ.க.வின் யோகா நாள் விளம்பரத்திற்காகவே, பீகார் அரசு பங்கேற்காது: நிதிஷ் குமார்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி விளம்பரத்திற்காகவே சர்வதேச யோகா நாளைக் கொண்டாடுவதால் அதில் பீகார் அரசு பங்கேற்காது என்று முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

     பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முயற்சியால் சர்வதேச யோகா நாள் கடந்த 2015-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

     பா.ஜ.க. அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறது. அதேபோல், இந்த ஆண்டும் சர்வதேச யோகா நாளைச் சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

     இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி விளம்பரத்திற்காகவே சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுவதால் அதில் பீகார் அரசு பங்கேற்காது என்று முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

     இது குறித்து அவர் கூறுகையில்,

நான் ஓகம் கலைக்கு எதிரானவன் அல்ல. ஆனால், விளம்பரத்திற்காக செய்வதை விரும்பவில்லை. நானும் ஓகப்பயிற்சி செய்கிறேன். ஆனால் அதனை விளம்பர படுத்தவில்லை

என்றார்.

     

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.