Show all

பெண்ணடிமைத்தனம் பேணுவதில் பாஜகவும், காங்கிரசும் ஓர் அணியில்! சபரிமலையில் பெண்கள் அனுமதி தீர்ப்புக்கு எதிர்ப்பு

18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்பினை எதிர்த்து கேரள மாநில அரசு முறையீடு செய்யாததை எதிர்த்து காங்கிரசும், பாஜகவும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து அகவைப் பெண்களும் செல்லலாம் என அண்மையில் உச்சஅறங்கூற்றுமன்றம்,  பாஜக போன்ற ஆதிக்க சக்திகளின் 'ஆண்டான் அடிமை பாகுபாட்டு ஒருங்கிணைப்பு' தத்துவத்திற்கு சாவுமணி அடிக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி இருந்தது. இந்தத் தீர்ப்பை பல்வேறு மகளிர் அமைப்புகள் வரவேற்ற போதிலும், ஹிந்து இயக்கங்கள் மற்றும் பாஜக, காங்கிரசும் இதனை எதிர்த்து குரல் எழுப்பி வருகின்றன.

இந்தத் தீர்ப்பு தொடர்பாக முதல்மந்திரி பினராயி விஜயனுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனையை அடுத்து, சபரிமலை கோவிலுக்கு வரும் பெண்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தேவசம்போர்டின் முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தாலா, பக்தர்களின் நம்பிக்கையின் பக்கமே காங்கிரஸ் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேபோல், சபரிமலை கோவில் பக்தர்களுக்கே தங்களது முழு ஆதரவும் என்று கேரள மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை தெரிவித்துள்ளார். பாஜக ஆதரவு யுவ மோர்சா மற்றும் மகிளா மோர்சா ஆகிய அமைப்புகள் மாநில அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

சாமியே ஐயப்பா என முழக்கமிட்டவாறு நடைபெறும் இந்த பேரணியில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக மகிளா மோர்சா அமைப்பின் கேரள மாநில தலைவர் சோபா சுரேந்தரன், சபரிமலை கோவிலின் புனிதம் காக்க, கேரள மாநில பெண்கள் அனைவரும் உச்சஅறங்கூற்றுமன்ற தீர்ப்புக்கு எதிராகவே இருப்பதாகவும், தீர்ப்பை எதிர்த்து முறையிட மாநில அரசு மறுத்து இருப்பது லட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையை உடைப்பதாக அமைகிறது என குறிப்பிட்டுள்ளார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,930.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.