22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உச்சஅறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவராக உள்ள ரஞ்சன் கோகாய் வரும் வியாழக்கிழமையுடன் பணி ஓய்வு பெறுவதால் புதன் கிழமை அல்லது அல்லது அதற்கு முன்னதாக அயோத்தி வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதன் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அயோத்தியில் 144 தடை உத்தரவு பிறக்கபிக்கப்பட்டு, காவல் துறை குவிக்கப்பட்டு வருகிறது. இந்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதில் உளவுத்துறை அளிக்கும் தகவல்கள் அடிப்படையில் மாநில அரசுகள், ஒன்றியப் பகுதிகள் உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 4000க்கும் அதிகமான பாதுகாப்பு படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த அறிவுறுத்தப்படுகிறது. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. அசம்பாவிதங்கள் நடக்குமோ என்ற அச்சத்தில், பாதுகாப்பு கருதி அயோத்தி மக்கள், குடும்பம் குடும்பமாக ஊரை விட்டு இடம்பெயரத் தொடங்கியுள்ளனர். சிலர் முன்னெச்சரிக்கை நடவக்கையாக உணவு பொருட்களை இப்போதே சேமித்து வைக்க தொடங்கியுள்ளனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,330.
பல ஆண்டுகளாக நடந்து வரும் அயோத்தி வழக்கில் பலகட்ட விசாரணை, வாதங்களுக்கு பிறகு இவ்வழக்கின் தீர்ப்பு, நடப்புக் கிழமையில் எதிர்பார்க்கப்படுகிறது. அது தொடர்பாக ஊடகங்கள் வெளிப்படுத்தும் பரபரப்பு, மக்களைத் தொற்றிக் கொண்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.