டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் புகுந்து மாணவர்கள் மற்றும் பேராசியர்களை, அகில பாரத வித்தியார்த்தி பரிசத், அமைப்பினர் முகமூடி அணிந்து தாக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் புகுந்து மாணவர்கள் மற்றும் பேராசியர்களை, அகில பாரத வித்தியார்த்தி பரிசத், அமைப்பினர் முகமூடி அணிந்து தாக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அகில பாரத வித்தியார்த்தி பரிசத், வலதுசாரி சிந்தனை கொண்ட கல்வி நிலைய மாணவர்களின் அகில இந்திய அமைப்பாகும். இவ்வமைப்பு இந்தியாவின் மிகப்பெரிய மாணவர் அமைப்பாகச் செயல்படுகிறது. இவ்வமைப்பு இந்திய விடுதலைக்குப் பின்பு முதலாம் ஆண்டில் இரண்டாம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டது. இந்தியாவின் அனைத்து பல்கலைக்கழகங்களில் இந்த அமைப்பின் கிளைகள் தொடங்கப்பட்டன. ஸ்ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின், மாணவர் அணியாக இந்த அமைப்பு செயல்படுகிறது. பாரதிய ஜனதா கட்சியின் இளஞர் அமைப்புடன் செயல்படுகிறது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போர்க்களமாக காட்சியளிக்கிறது. பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைந்துள்ள விடுதிகள் சூரையாடப்பட்டுள்ளன. பாஜக மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் சனிக்கிழமை அதிகாலை பெண்கள் தங்கும் சபர்மதி விடுதியில் புகுந்து தாக்குதல் நடந்தியதாக நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்பு குற்றஞ்சாட்டுகிறது. அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினருடன் பல்கலைக்கழக பாதுகாவலர்களும் முகமூடி அணிந்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. பல்கலைக்கழக வளாகம் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நேரு பல்கலைக்கழகத்தில், மாணவர்கள் தங்கும் விடுதிக்கான விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவர கடந்தாண்டு நிர்வாகம் முடிவெடுத்தது. இதுதொடர்பாக முன்வரைவு ஒன்றையும் வெளியிட்டு, மாணவர்களிடம் கருத்துகளைக் கேட்டிருந்தது. இதில், விடுதிக்கான கட்டணத்தை எக்கச்சக்கமாக உயர்த்தியிருந்தது. இதனால் வெளியான முன்வரைவுக்கு மாணவர்கள் நடுவே பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பாக பல்கலைக்கழக துணை வேந்தரைச் சந்திக்க முடிவுசெய்தனர். துணைவேந்தரைச் சந்திக்க முடியாததால் அவரது அறைக்கு மாணவர்கள் பூட்டு போட்டனர். இந்தச் சூழலில், மாணவர்கள் போராட்டத்தைக் கையில் எடுத்தனர். சுமார் 70 நாட்களுக்கு மேலாக நேரு பல்கலைக்கழக மாணவர்கள் விடுதி கட்டண உயர்வு, தேர்வு கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தைக் கைவிடுமாறு மாணவர்களை, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மாணவர்கள் போராட்டத்தைக் கைவிடாத நிலையில், அவர்கள் மீது இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான இந்தத் தாக்குதல் இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,389.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.