அமுதசுரபி போல தன் வங்கிக்;கணக்கில் பணம் சுரந்து கொண்டேயிருக்க, மீண்டும் அரியணையேறிய மோடி அரசு, தனது வங்கிக்கணக்கில் தவணை முறையில் பதினைந்து இலட்சம் போடுது போல, என்று நினைத்துக் கொண்டு, எடுத்து, எடுத்து 89000 ஐ தாராளமாக செலவு செய்துவிட்டார். மத்தியப் பிரதேசம் மாநிலம் ரௌனி பகுதியைச் சேர்ந்த கூக்கும்சிங் என்ற நபர். 07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மீண்டும் அரியணையேறிய மோடி அரசு, தனது வங்கிக்கணக்கில் தவணை முறையில் பதினைந்து இலட்சம் போடுது போல, என்று நினைத்துக் கொள்ளும் வகையில், மத்தியப் பிரதேசம் மாநிலம் ரௌனி பகுதியைச் சேர்ந்த கூக்கும்சிங்குக்கு ஓர் அதிசயம் நடந்தது. இவர் அந்தப் பகுதியில் இருக்கும் இந்திய மாநில வங்கி கிளையில் கணக்கு வைத்துள்ளார். கடந்த சில மாதங்களாக அவரது வங்கிக் கணக்கில் மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை சேர்ந்துகொண்டே இருந்தது. இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் கூக்கும் சிங் தெரிவிக்கவில்லை. மீண்டும் அரியணையேறிய மோடி அரசு, தனது வங்கிக்கணக்கில் தவணை முறையில் பதினைந்து இலட்சம் போடுது போல, என்று நினைத்துக் கொண்டாராம். விசாரணையில் அப்படித்தான் தெரிவித்திருக்கிறார். இவர் தனக்கு வந்த பணத்தை தாராளமாக செலவு செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோனி கிராமத்தைச் சேர்ந்த கூக்கும்சிங் என்ற மற்றொரு நபர் தன்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் 89,000 எடுக்கப்பட்டதாக வங்கியில் புகார் தெரிவித்துள்ளார். இவரும் இந்திய மாநில வங்கியில்தான் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளார். இவரது புகாரையடுத்து வங்கி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ரோனி கிராமத்தைச் சேர்ந்த கூக்கும் சிங் என்பவரின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை ரௌனி கிராமத்தைச் சேர்ந்த கூக்கும் சிங் எடுத்தது தெரியவந்தது. ஆனால், இது அதிகாரிகளின் அலட்சியத்தால் நடந்த தவறு எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டு நபர்களின் பெயரும் கூக்கும்சிங்தான். இவர்கள் வெவ்வேறு கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இருவருக்கும் ஒரே சேமிப்புக் கணக்கைத் கொடுத்துள்ளனர் வங்கி அதிகாரிகள். ரோனி கிராமத்தைச் சேர்ந்த கூக்கும்சிங் வேலை கிடைத்து ஹரியானாவுக்குச் சென்றுவிட்டார். அங்கிருந்து சம்பாதித்த பணத்தை ஆலம்பூர் இந்திய மாநில வங்கிக் கிளையின் மூலம் பணத்தை போட்டு வந்துள்ளார். அந்தக் கணக்கில் போட்ட பணத்தை மற்றொரு கூக்கும் சிங் எடுத்து செலவு செய்துள்ளார். ஒரே கணக்கில் இந்தச் செயல்பாடுகள் நடந்ததால் வங்கி அதிகாரிகளுக்கு சந்தேகம் எழவில்லை. இந்த நிலையில்தான், ரோனி கிராமத்தைச் சேர்ந்த கூக்கும்சிங் நிலம் வாங்குவதற்காக தனது வங்கிக் கணக்கில் போட்டிருந்த பணத்தை எடுக்கச் சென்றுள்ளார். அப்போது தன்னுடைய கணக்கில் இருந்து 89,000-க்கும் அதிகமான தொகை எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, வங்கி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். அவர்கள் நடத்திய விசாரணையில்தான் இந்தக் குளறுபடிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து, ரௌனி கிராமத்தைச் சேர்ந்த கூக்கும் சிங்கிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அதற்கு அவர் அளித்த பதிலோ அசத்தலோ அசத்தல் வகை. தலைமை அமைச்சர் மோடி பதினைந்து இலட்சத்தை தவணை முறையில், எனக்கு அளித்தாக எண்ணினேன். இதில் வேறு எந்தக் காரணமும் இல்லை. அதை எடுத்துதான் செலவு செய்தேன் என்றார். சேமித்த பணத்தை இழந்த கூக்கும் சிங், “நான் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து பணத்தை செலுத்தி வருகிறேன். கடந்த மாதம் நான் நிலம் வாங்கலாம் என்பதற்காக என்னுடைய வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுக்க வந்தேன். அந்த நேரத்தில் என்னுடைய வங்கி கணக்கிலிருந்து 89 ஆயிரம் ரூபாய் வரை எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் மிகவும் அதிர்ச்சி அடைந்து புகார் அளித்தேன். வங்கி நிர்வாகம் என்னுடைய பணத்தை வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,345.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.