எங்கள் காஷ்மீர் சகோதரர்களைக் கொன்றவர்களே அடுத்த
குறி என அல்கொய்தா இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்துள்ளது. இது குறித்து அல் கொய்தா
ஆவணம் ஒன்றை வெளியிட்டள்ளது. அந்த
ஆவணத்தில் துணைக்கண்டத்தின் மீதான முஜாகிதீன் நடவடிக்கைகள் குறித்த அனைத்து தகவல்களும்
இருந்தன. அதில் அல் கொய்தாவின் நோக்கம் மற்றும் உறுப்பினர்கள் என்ன செய்ய வேண்டும்
என்ன செய்ய கூடாது என்பது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும்
அந்த ஆவணத்தில், ‘ராணுவ வீரர்கள் அனைவரும் சண்டை களத்தில் இருந்தாலும் சரி முகாமில் இருந்தாலும்
சரி அல்லது விடுமுறைக்கு சென்றாலும் சரி, எங்கள் விதிமுறைகளுக்கு எதிராக உள்ள அனைவரும்
எங்களின் தாக்குதல் பட்டியலில் உள்ளனர். மேலும் இந்திய பாதுகாப்பு படை மற்றும் இந்து மத
பிரிவினைவாதிகள் அமைப்பின் தலைவர்கள் அனைவரும்
எங்கள் குறி’ என கூறப்பட்டுள்ளது. மேலும்
எங்கள் காஷ்மீர் சகோதரர்களைக் கொன்ற ராணுவ அதிகாரிகள் அனைவரையும் பழிவாங்குவோம் என
கூறியுள்ளனர். மற்ற
முஸ்லீம் இயக்கங்களிலிருந்து அல் கொய்தாவின் செயல்பாடுகள் வேறுபட்டிருக்கும். மற்ற
இயக்கங்கள் பொதுவான இந்து, முஸ்லீம் அல்லது புத்த மத மக்கள் மற்றும்
புனித இடங்களில் தாக்குதல் நடத்த மாட்டார்கள். அல்
கொய்தா பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புடன் இணைந்து செயல்படுகின்றனர். மேலும் அவ்வமைப்பின்
உறுப்பினர்கள் நாட்டின் பல்வெறு இடங்களில் செயல்படுவதாக அல் கொய்தாவின் தலைவர் அய்மன்
அல் சவாகிரி கூறியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.