பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான போக்குவரத்து
நிறுவனத்தை கைகழுவ நடுவண்; அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து நடுவண்; நிதி அமைச்சர் அருண் ஜெட்லி
கூறுகையில், சரியான முதலீட்டாளரை
எதிர்பார்த்து உள்ளோம். அப்படி ஒரு நபர் கிடைத்தால், ஏர் இந்தியா நிறுவனத்தில் இருந்து
நடுவண் அரசு வெளியேறும் என தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
விமான போக்குவரத்து
சந்தையில், 84விழுக்காடு தனியார் நிறுவனங்களால் கையாளப்படுகிறது. எனவே, 100 விழுக்காடும்
தனியாரிடமும் செல்வதில் எந்த தவறும் இல்லை. விமான போக்குவரத்தில் ஏர் இந்தியாவின் பங்களிப்பு
மிகவும் குறைவு. ஆனால், அந்த நிறுவனத்தின் கடன் சுமை 2016ம் ஆண்டு டிசம்பர் வரை,
50 ஆயிரம் கோடி ரூபாய். உள்நாட்டு விமான போக்குவரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் பயணச்சீட்டு
விற்பனை, 14.1 விழுக்காடு என குறைந்துள்ளது. இதில், இண்டிகோ நிறுவனம் பங்களிப்பு,
39.8விழுக்காடு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்களிப்பு, 15.5விழுக்காடு. பிரதமராக வாஜ்பாய் இருந்த போது நான் சிறிய காலத்திற்கு
விமான போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றி உள்ளேன். அப்போது ஏர் இந்தியாவின் பங்குகளை
முழுமையாக விற்பனை செய்ய வேண்டும் என்ற கோப்பில் கையெழுத்திட்டுள்ளேன். விமான போக்குவரத்து
நிறுவனத்தை நடத்த வேண்டியது அரசின் பணியல்ல. எனினும், இந்த விசயத்தில் இறுதி முடிவு
எடுக்க வேண்டியது தற்போதைய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கெஜபதி ராஜு தான்.
தனியார் விமான போக்குவரத்து நிறுவனத்திற்கு நட்டம்
ஏற்பட்டால், மக்கள் வரி பணத்தில் இருந்து கொடுக்க வேண்டியது இல்லை. ஆனால், ஏர் இந்தியா
நிறுவனத்தை நடத்த நடுவண் அரசு பணம் கொடுக்க வேண்டி உள்ளது. அந்த பணத்தை மீட்டு எடுத்தால்,
பிற நல்ல துறைகளில் முதலீடு செய்யலாம். இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார். நட்டம் ஏன் வருகிறதென்று கண்டு பிடிக்காமல் எல்லாத்;தையும்
மூடிட்;டுப் போங்கப்பா; ஆட்சியையும் விட்டுடுங்களேன்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.