Show all

பாஜக சட்டமன்ற உறுப்பினரின் அடாவடிப் பேச்சு! ஒருமணி நேரத்தில் இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கிடுவோம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களை ஒரு மணி நேரத்தில் இருக்கும் இடம் தெரியாமல் துடைத்தெறிந்துவிடுவோம் என ஹரியானா பாஜக சட்டமன்ற உறுப்பினர் இராம்குஜ்ஜார் அடாவடிப் பேச்சு கண்டனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

13,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களை ஒரு மணி நேரத்தில் இருக்கும் இடம் தெரியாமல் துடைத்தெறிந்துவிடுவோம் என ஹரியானா பாஜக சட்டமன்ற உறுப்பினர் இராம்குஜ்ஜார் அடாவடிப் பேச்சு கண்டனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பேரணிகளும், போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களை ஒரு மணி நேரத்தில் இருக்கும் இடம் தெரியாமல் துடைந்தெறிவிடுவோம் என ஹரியானா பாஜக சட்டமன்ற உறுப்பினர் இராம்குஜ்ஜார் அடாவடி காட்டியிருக்கிறார்.

இராகுலையும், பிரியங்காவையும் பெட்ரோல் குண்டை போன்றவர்கள் என ஹரியானா பாஜக அமைச்சர் அனில் விஜ் கூறியிருந்த நிலையில், அதே மாநிலத்தை சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடுவோர்களைத் துடைந்தெறிவிடுவோம் எனக் கூறியிருப்பது கடும் கண்டனத்திற்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,380.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.