Show all

காசநோய் தடுப்பு திட்டத்தில் பயன்பெற இனி ஆதார் கட்டாயம்: நடுவண் அரசு அறிவிப்பு

நடுவண் அரசின் காசநோய் தடுப்பு திட்டத்தில் பய்னபெற காச நோயாளிகள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடுவண் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்  காசநோய் சிகிக்கை பெறும் நோயாளிகள் இலவச சிகிச்சை பெற ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் தங்கள் ஆதார் எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

     மேலும், ஆதார் எடுக்கும் வரை வருமானவரி கணக்குஎண், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையைச் சமர்ப்பித்து சிகிச்சையை தொடரலாம் எனவும் நடுவண் அரசு கூறியுள்ளது. முன்னதாக வங்கிகள், பத்திரப்பதிவு, எரிவாயு இணைப்பு, ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்டவற்றிற்கு நடுவண் அரசு ஆதார் எண்ணை கட்டாயமாக்கியிருந்த நிலையில் தற்போது மருத்துவத்திற்கும் ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.