Show all

ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது! உத்தரப்பிரதேச மாநிலத்தில் எட்டு போலி பல்கலைக் கழகங்கள் இயங்குகிறதாம்

இந்தியா முழுதும் 24 போலி பல்கலைக்கழகங்களும், உத்தர பிரதேச மாநிலத்தில் மட்டுமே, எட்டு போலி பல்கலைக்கழகங்களும் இயங்கி வருகின்றன என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

18,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: உத்தர பிரதேச மாநிலத்தில் எட்டு போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக பல்கலைக்கழக மானியக் குழு கண்டறிந்துள்ளது. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மக்களவையில் ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் நேற்று ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது: மாணவர், பெற்றோர், பொதுமக்கள் மற்றும் ஊடகங்களில் வந்த புகார்களின்படி, நாடு முழுதும் 24 போலி பல்கலைகள் இயங்கி வருவதை பல்கலைக்கழக மானியக் குழு கண்டறிந்துள்ளது. 

பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதி பெறாமல் இயங்கி வரும் மேலும் இரண்டு பல்கலைக்கழகங்கள் தொடர்பான வழக்கு அறங்கூற்றுமன்றத்தில் உள்ளது. உத்தர பிரதேசத்தில் அதிகபட்சமாக எட்டு, டெல்லியில் ஏழு, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா இரண்டு, புதுச்சேரி உட்பட ஐந்து மாநிலங்களில் தலா ஒரு போலி பல்கலைகழகங்கள் உள்ளன. இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.