தற்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இராகுல் காந்தி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக காஷ்மீர் சென்றுள்ளார். காஷ்மீருக்கான சிறப்புத் தகுதி நீக்கப்பட்ட பிறகு முதல் முறையாக இராகுல் காந்தி நேற்று சிறீநகர் சென்றார். 26,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு தகுதியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீக்கியது. எங்கள் குடும்பம் டெல்லியில் வசிக்கிறது. அதற்கு முன் அலகாபாத்திலும், அதற்கு முன் காஷ்மீரிலும் வசித்து வந்தது. காஷ்மீரிகளின் பழக்க வழக்கங்கள், சிந்தனை ஓட்டம் ஆகியவை என்;னோடு கலந்ததுதான். பாராளுமன்றத்தில் காஷ்மீர் பாடு, பெகாசஸ் பாடு குறித்து பேச முயற்சித்த போதெல்லாம், எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதில்லை. காஷ்மீர் பிரச்சினையை அன்பு மற்றும் ஈடுபாட்டின் மூலம் வேறு வழியில் தீர்க்க முயற்சித்தோம். ஆனால் பாஜக அனைத்தையும் சிதைத்து விட்டது. காஷ்மீர் மக்கள் காயப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை நான் அறிவேன். அன்பு மற்றும் புரிதலின் உறவை நான் விரும்புகிறேன். நான் உங்களுக்குத் துணை நிற்பேன், உங்களுக்கான மாநில தகுதியை மீட்டெடுக்க நான் போராடுவேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீர் வரும் போது நான் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டேன். தற்போது நான் ஜம்மு மற்றும் லடாக் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்கிறேன். இது அதற்கான தொடக்கம். நான் மீண்டும் மீண்டும் வருவேன் என தெரிவித்தார்.
தற்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இராகுல் காந்தி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக காஷ்மீர் சென்றுள்ளார். காஷ்மீருக்கான சிறப்புத் தகுதி நீக்கப்பட்ட பிறகு முதல் முறையாக இராகுல் காந்தி நேற்று சிறீநகர் சென்றார். சிறீநகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து பேசியதாவது:
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.