சென்னை சென்ட்ரல் உட்பட 25 தமிழக தொடர்வண்டி நிலையங்கள்
தனியாருக்கு கூண்டோடு விற்பனை- பயணிகள் பகீர்! தமிழகத்தில்
சென்னை சென்ட்ரல் உட்பட 25 தொடர்வண்டி நிலையங்கள்; மொத்தமாக தனியாருக்கு விற்பனை செய்யப்பட
உள்ளன. இதனால் தொடர்வண்டி கட்டணத்தையும் தனியார் நிறுவனங்களே நிர்ணயிக்கும் அபாயம்
இருப்பதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நவீனமயமாக்கல்
என்ற பெயரில் நாட்டில் அதிக வருவாய் ஈட்டும் தொடர்வண்டி நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க
மோடி அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் சென்னை சென்ட்ரல், எழும்பூர்,
விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை என 25 தொடர்வண்டி நிலையங்கள் அப்படியே தனியாருக்கு
விற்பனை செய்யப்பட உள்ளன. இதற்காக
பன்னாட்டு நிறுவனங்கள் பல போட்டி போட்டுக் கொண்டு களத்தில் குதித்துள்ளன. இந்த நிறுவனங்கள்
விதித்துள்ள நிபந்தனைகளில் ப்ளாட் பார்ம் கட்டணம், பார்க்கிங் கட்டணத்தை தாங்களே வசூலிப்போம்
என்பது உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன்
தொடர்வண்டி நிலையங்களில் மதுபான குடிப்பகங்கள் அமைக்கவும் இந்நிறுவனங்கள் அனுமதி கோரியுள்ளன.
இந்தக் கோரிக்கைகள் பலவற்றை தொடர்வண்டி துறை நிர்வாகம் ஒப்புக் கொண்டிருக்கிறது. இதன்
உச்சகட்டமாக தொடர்வண்டி கட்;டணங்கள் நிர்ணயிக்கும் உரிமையை கோரவும் பன்னாட்டு நிறுவனங்கள்
திட்டமிட்டுள்ளன. இதனால் தொடர்வண்டி கட்டணங்கள் பல மடங்கு அதிகரிக்க கூடும் என்கிற
பீதி பயணிகளிடையே ஏற்பட்டுள்ளது. இதனிடையே
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மிக பிரமாண்டமான ஷாப்பிங் மால் ஒன்றை கட்ட தனியாருக்கு
அனுமதி கொடுக்கப்பட்டுவிட்டது. மோடி அரசின் இந்நடவடிக்கையால் பல லட்சம் தொடர்வண்டி
துறை ஊழியர்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்வண்டி துறை தொழிற்சங்கங்கள்
கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.