பொன்னியின் செல்வன் படத்தின் விளம்பரக் காணொளியில் முன்னெடுக்கப்பட்டுள்ள பேரளவான காட்சிகள், வியக்கத்தக்க எண்ணிமச் செயல்பாடுகள் ஆகியவை பொன்னியின் செல்வன் புதினத்திற்கு இணையாக திரைப்படத்தையும் இயக்கி உள்ளார் என்பதைத் தெரிவிப்பதாகிறது. 25,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: தெய்வத்திரு கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' வரலாற்றுப் புதினத்தை பேரறிமுக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இதன் விளம்பரக்காணொளி நேற்று மாலை சரியாக ஆறு மணிக்கு வெளியாகி இணையதளங்களில் தீயாகி வருகிறது. தெய்வத்திரு கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' வரலாற்றுப் புதினம் ஐந்து பாகங்கள் கொண்டது. இந்த புதினத்தைப் படிக்கும்போது ஒவ்வொரு கதைஉறுப்பினர்களையும் தங்களது மனதில் கற்பனையாக நினைத்து படிக்கும்போதே ஒரு மலைப்பை ஏற்படுத்தும் என்பதும் அந்த அளவுக்கு தெய்வத்திரு கல்கியின் எழுத்து மற்றும் வர்ணனை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது பொன்னியின் செல்வன் புதினத்தை படித்த போது ஏற்பட்ட மனநிறைவைத் திரைக்கு கொண்டு வருவது என்பது அறைகூவலான செயயே என்ற நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' எந்த அளவுக்கு கொண்டாடிகளை நிறைவுபடுத்தும் என்ற வினா தொடர்ந்து கொண்டிருந்தது. நேற்று வெளியாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் விளம்பரக் காணொளியில் முன்னெடுக்கப்பட்டுள்ள பேரளவான காட்சிகள், வியக்கத்தக்க எண்ணிமச் செயல்பாடுகள் ஆகியவை பொன்னியின் செல்வன் புதினத்திற்கு இணையாக திரைப்படத்தையும் இயக்கி உள்ளார் என்பதைத் தெரிவிப்பதாகிறது. இந்தப் படம் தமிழ்த்திரை கொண்டாடிகளால் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்றும், கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தை அடுத்து 'பொன்னியின் செல்வன்' படத்தின் வணிகத்தண்டல் மிகப்பெரிய சாதனையாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,304.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.