மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் அம்மன் வேடத்தில் நடிக்கவுள்ளார் நயன்தாரா. அதற்கு 40 நாட்கள் ஒப்புதல் கொடுத்து உள்ள நிலையில், இந்த 40 நாட்களும் அவர் அம்மனுக்கு கிடக்கை (விரதம்) இருந்து சைவ உணவுகளை மட்டும் சாப்பிட முடிவு செய்திருக்கிறாராம். 02,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தளபதி விஜயுடன் நயன்தாரா நடித்த பிகில் திரைப்படம் அண்மையில் வெளியாகி மிகப்பெரும் வெற்றியைத் தந்துள்ளது. பொங்கல் திருவிழாவிற்கு இரஜினியுடன் நயன்தாரா நடித்த ‘தர்பார்’ திரைப்படம் வெளியாக உள்ளது. விக்னேஷ் சிவன் தயாரிப்பில், மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகி வரும் ’நெற்றிக்கண்’ என்ற படத்தில் நயன்தாரா பார்வையற்ற மாற்றுத் திறனாளி வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஒரு கொரிய மொழி படத்தின் மறுதயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது இதுவெல்லாம் ஒருபுறம் இருக்க, நடிகை நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி கதை திரைக்கதை எழுதி இயக்கவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படத்தில் அம்மன் வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் நடிக்க நயன்தாரா 40 நாட்கள் ஒப்புதல் கொடுத்து உள்ளதாகவும், இந்த 40 நாட்களும் அவர் அம்மனுக்கு கிடக்கை (விரதம்) இருந்து சைவ உணவுகளை மட்டும் சாப்பிட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது ஏற்கனவே அவர் தெலுங்கில் உருவான சிறிராமஜெயம் என்ற படத்தில் சீதை வேடத்தில் நடித்த போதும் அவர் கிடக்கையிருந்து பூசையில் ஈடுபட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வரலாறு நெடுக தேடினாலோ, பழந்தமிழ் இலக்கியங்களிலோ இந்த விரதம், உண்ணாவிரதம் என்கிற முறைகள் எல்லாம் தமிழர்களுக்கு உடன்பாடானதாகவே தெரியவில்லை. குலதெய்வ வழிபாட்டில் கூட விருந்தோம்பல் இருந்திருக்கிறதேயொழிய இந்த விரதம், உண்ணாவிரதம், என்கிற வருத்திக் கொள்ளும் நிகழ்வுகளில் தமிழர்களுக்கு உடன்பாடு இருந்ததில்லை. விருந்தோம்பலே தமிழர் பண்பாட்டின் உச்சம். உடல் நிலை சரியில்லாமல் போனால் மருத்துவத்தில் பத்தியம் வேண்டுமானால் உண்டு. தான் சாப்பிடாமல் இருக்கும் விரதம், உண்ணாவிரதம் என்பதற்கு மாற்றாக, இது போன்ற சமயங்களில், ஆதரவற்றோர் விடுதிகளுக்கு உணவு வழங்கி மக்கள் அன்பையும் ஆதரவையும் கூடுதலாகப் பெற முயலலாமே நயன்தாரா. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,340.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.