விஜய் சேதுபதியின் 33வது படத்திற்கு, கணியன் பூங்குன்றனாரின் புறநானுற்றுப் பாடலின் முதலடியான, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ்த் திரையுலகின் முன்னணி கதைத்தலைவர்களில் கை நிறைய படங்களில் நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. கதைத்தலைவன் என்றில்லாமல், பகைவன், சிறப்பு தோற்றம் என அனைத்து விதமான வேடங்களையும் ஏற்று நடித்து வருகிறார். விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படம் அடுத்த மாதம் வெளியாகிறது. இதைத்தவிர ஜெனநாதன் இயக்கும் லாபம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் பகைவனாக, தெலுங்கு படங்கள் என வேலையாக இருந்து வருகிறார் விஜய்சேதுபதி. சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை தயாரிக்கும் படத்திற்கு யாதும் ஊரே யாவரும் கேளிர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் விஜய் சேதுபதியின் 33வது படமாகும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தமிழர்தம் பதினென் மேல் கணக்கு நூல்களில் ஒன்றான புறநானூற்றில் கணியன் பூங்குன்றனார் பாடிய பாடலின் முதல் அடியாகும் இதோ அந்தப் புறநானூற்றுப் பாடல்: யாதும் ஊரே யாவரும் கேளிர் இந்தப் பாடலின் பொருள்: -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,322.
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
எல்லா ஊரும் எம் ஊர் எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.
என்பதாகும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.