கமல்ஹாசனின் தந்தை சீனிவாசன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகர் பிரபு- கமலைக் குடிஅரசு தலைவராகப் பார்க்க ஆசைப்படுவதாகத் தெரிவித்துள்ளார். 21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பரமக்குடியில் நடந்த, கமல்ஹாசனின் தந்தை சீனிவாசன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகர் பிரபு- கமலை, குடிஅரசு தலைவராகப் பார்க்க ஆசைப்படுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் பிரபு பேசியதாவது: நடிப்புலகில் கமல் திறமை பெற்றவர். அவரை அன்பால் எளிதில் வென்று விடலாம். 5அகவையில் நடிக்க தொடங்கிய கமலுக்கு, இன்று 60 அகவையாகி விட்டதாகச் சொல்கிறார்கள். பார்த்தால் அப்படியா தெரிகிறது? அவர் என்றும் இளவல் கமல்ஹாசன்தான். அப்பாவுக்கு (சிவாஜி) கமல் மீது அளவு கடந்த அன்பு உண்டு. தனது திரையுலக வாரிசு கமல்தான் என்று கூறி உள்ளார். தொழில்நுட்ப விசயங்கள் அனைத்தையும் கற்றுக்கொண்டு தன்னைவிட அதிக திறமையுடன் கமல் விளங்கி வருவதாக அப்பா கூறினார். எங்கள் குடும்பம் மிகவும் பெரியது. அதுபோல் கமல் குடும்பமும் பெரியது. அண்ணனை தற்போது குடும்பத்துடன் பார்ப்பது மிகுந்த சந்தோசமாக உள்ளது. அவர் மனதுக்குள் என்ன நினைப்பார் என்பது எனக்கு தெரியும். கமல் மென்மையானவர். நீங்கள் (ஆர்வலர்கள்) அன்பு காட்டுவதுபோல் நானும் அன்பு காட்டுகிறேன். கமலை, குடிஅரசு தலைவராகப் பார்க்க ஆசைப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறினார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,329.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.