‘எனக்கு திருமணமாகி விட்டதா’ மறுத்து- நகைச்சுவை நடிகர் யோகி பாபு தனது கீச்சுப்பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். 09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அண்மைக் காலமாக மக்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்று, புகழ் அடைந்து வருபவர் நகைச்சுவை நடிகர் யோகிபாபு. கோலமாவு கோகிலா படத்தின் வெற்றிக்கு பின், திரையுலகம் தேடும் நடிகராக மாறிவிட்டார். சிவகார்த்திகேயன், விஜய், அஜித், இரஜினிகாந்த், உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் யோகி பாபு ஒரு சில படங்களில் கதைத்தலைவனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் யோகிபாபுவுக்கு திருமணம் நடைபெற்றுவிட்டதாகவும், இவர்தான் அவர் மனைவி என்றும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சிலர் குறும்பில் ஈடுபட்டுவருவதாகத் தெரிகிறது. இதுகுறித்து தனது கீச்சுப் பக்கத்தில் விளக்கமளித்திருக்கும் நடிகர் யோகி பாபு, “என் திருமணம் பற்றிய தவறான தகவல்கள் பரவி வருகிறது. அது வெறும் வதந்தியே. எனது திருமணம் முடிவானதும் நானே அனைவருக்கும் முறையாக அறிவிப்பேன். நன்றி.” என்று கூறியுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,347.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.