Show all

சைகை மொழியில் காணொளிஅழைப்பு! ஓர் உண்மை நிகழ்வின் நெகிழ்ச்சியும், அதை ‘காற்றின் மொழி’ தொடரில் பொருத்தி மகிழ்ச்சியும்

மாற்றுத்திறனாளி ஒருவர் சைகை மொழியில், செல்பேசி காணொளிஅழைப்பில், பேசும் காணொளி இணையத்தில் தீயாகப் பரவி வருகின்றது. இது ஒருபுறம். இந்த உண்மை நிகழ்வு போல, காற்றின் மொழி தொடரில், மாற்றுத்திறனாளி கதைத்தலைவியோடான காதலை முன்னெடுத்து காற்றின்மொழி தொடரை அழகிய காதல் கவிதை ஆக்குவாரா இயக்குநர்! இது மறுபுறம்.

15,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மாற்றுத்திறனாளி ஒருவர் சைகை மொழியில், செல்பேசி காணொளிஅழைப்பில், பேசும் காணொளி இணையத்தில் தீயாகப் பரவி வருகின்றது.

உலகின் எந்தப்பகுதியில் இருப்பவரையும் தொடர்பு கொண்டு பேச செல்பேசிகள் உதவுகின்றன. ஆனால் பேசவோ, கேட்கவோ முடியாத மாற்றுத்திறனாளிகள் அதனை பயன்படுத்த முடியாத சூழலே நிலவி வந்தது.

நவீன வகை மிடுக்குப்பேசிகள் இந்தக் குறையை தீர்த்து வைத்துள்ளன. இந்நிலையில், பேசவோ, கேட்கவோ முடியாத மாற்றுத்திறனாளி ஒருவர், காணொளிஅழைப்பு மூலம் வேறொருவருடன் பேசும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தனக்கு நெருக்கமான ஒருவருடன் மாற்றுத்திறனாளி ஒருவர் சைகை மொழியில் பேசும் காட்சி, அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இது ஒருபுறம் என்றால்:- விஜய் தொலைக்காட்சியின் காற்றின் மொழி தொடரில், ‘காது கேட்கும் ஆனால் பேசமுடியாத மாற்றுத் திறனாளி’ கதைத்தலைவியாக வருகிறார். காற்றின் மொழி நாடகம் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்படுகிற நிலையில், இன்றிலிருந்து அந்த நாடகத்திற்கு கூடுதலாக 15மணித்துளிகள் வேறு ஒதுக்கப்பட்டுள்ளது. 

கதைத்தலைவி, பேசமுடியாத மாற்று திறனாளி என்று அறியாமலே, கதைத்தலைவன் அவர் மீது காதல் கொண்டுள்ளார். இந்த நிலையில், ‘எப்போது கதைத்தலைவி பேசமுடியாத மாற்று திறனாளி என்பதை- கதைத்தலைவன் அறிந்து கொள்ளப் போகிறார்’ என்ற பரபரப்பு பார்வையாளர்கள் நடுவே ஒவ்வொரு அத்தியாயத்திலும் விடைகாண முடியாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

இன்று காற்றின் மொழி முன்னோட்டக் காணொளியில்:- கதைத்தலைவன், மாற்று திறனாளி கதைத்தலைவிக்கு, ஓர் அழகான மிடுக்குப்பேசியை பரிசளித்து, என்னோடு எப்போது வேண்டுமானலும் பேசலாம் என்று தெரிவிக்க, கதைத்தலைவி அழுது கொண்டு ஓடுகிறாள். கதைத்தலைவன் செல்பேசி பரிசளித்தது தவறோ என்று துணுக்குறுகின்றான். ஓடிச்சென்று கதைத்தலைவியைத் தேற்ற முயல்கின்றான். நான் செய்தது பிழையோ என்று கேட்கின்றான். அப்போது அவள் சைகைமொழியில் தனக்குப் பேச வராது என்று தெரிவிக்கின்றாள். 

காற்றின் மொழி நாடகத்தில்- ஒருவழியாக மாற்றுத்திறனாளி கதைத்தலைவி, அடுத்த கிழமையில் தன்னால் பேசவியலாது என்பதை கதைத்தலைவனுக்குத் தெரிவிக்கப் போகிறார் என்பது தெரிந்து விட்டது. ஆனாலும் பார்வையாளர்களுக்கு விட்டுப் போகவேண்டிய பரபரப்பு விட்டுப் போகாமல் புதிய பரபரப்பு ஒன்று தொற்றிக் கொண்டு விட்டது. 

மாற்றுத்திறனாளி ஒருவர் சைகை மொழியில், செல்பேசி காணொளிஅழைப்பில், பேசும் காணொளி இணையத்தில் தீயாகப் பரவி வருகின்ற உண்மை நிகழ்வு போல, காற்றின் மொழி தொடரில், மாற்றுத்திறனாளி கதைத்தலைவியோடான காதலை முன்னெடுத்து காற்றின்மொழி தொடரை அழகிய காதல் கவிதை ஆக்குவாரா இயக்குநர்! அவருக்கு யோசனை வருமா? முன்னெடுக்க வேண்டுமே! என்பதே அந்தப் புதிய பரபரப்பு.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,382.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.