பேட்டி எடுக்கக்கூடாது என்ற பட்டியலில் மிஷ்கினை வைக்கிறேன் என தெரிவித்துள்ளார் திவ்யதர்சினி. மிஷ்கினைப் பேட்டி எடுப்பது என்றால் திவ்யதர்சினிக்கு பயமாம். 22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தொகுப்பாளினிகளில் கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்து கலக்கி வருபவர் திவ்யதர்சினி. நிகழ்ச்சியைக் கலகலப்பாக கொண்டு செல்வதில் வல்லவர். அண்மையில் இது வரையிலான தனது கலைத்துறை பயணம் குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார். பேட்டியில் அவரிடம் இனி அவரை மட்டும் பேட்டி எடுக்கவே கூடாது என்று நீங்கள் நினைப்பது யார் என கேட்டுள்ளனர். அதற்கு அவர் இனி மிஷ்கின் அவர்களை பேட்டி எடுக்க கூடாது என்று நினைக்கிறேன் தெரிவித்துள்ளார். அவரை ஒருமுறை பேட்டி எடுக்க சிரமப்பட்டேன். சாதாரணமாக நன்றாக பேசுகிறார், கேள்வி கேட்கும்போது சமூகத்தின் மீது கோபத்தை வெளிப்படுத்துகிறார். (பொதுவாக நிகழ்ச்சியைக் கலகலப்பாக கொண்டு போகும் பாணி திவ்ய தர்சினியுடைது) எனக்கு என்ன செய்வது என்றே தெரியாமல் போகிறது. இதன் காரணமாக பேட்டி எடுக்கக்கூடாது என்ற பட்டியலில் மிஷ்கினை வைக்கிறேன் என தெரிவித்துள்ளார். யார் அந்த மிஷ்கின்: மிஷ்கின், தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். எளிய கதைகள், காட்சி அமைப்புகளுக்காக அறியப்படுகிறார். ரசிய கதையொன்றில் வரும் கதாப்பாத்திரமான மிஷ்கின் என்ற பெயரை தனக்கு சூட்டிக் கொண்டுள்ளார். இவர், தமிழில், சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு ஆகிய படங்களை இயக்கியுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,330.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.