Show all

எவன்டா நியாயக்காரன் இளப்பமா தமிழன்

28,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நீட்டால் தொடர்ந்து ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்விக்கு புறக்கணிக்கப்படும் போது, பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக கிராமங்களில் மருத்துவர்கள் பஞ்சம் ஏற்படும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

டாஸ்மாக்க உள்ளாற உட்டு 
அப்பா உயிரை பறிச்சுபுட்டீங்க
அப்பா இல்லா குழந்தையா நா
அம்மா உழைப்பில் படிக்கப் போனேன்
பனண்டு ஆண்டு படிச்சுப்புட்டு 
பத்துக்கு பத்து மதிப்பெண் வாங்கி
கெத்து காட்டின என்ன மடக்க 
நீட்டை வச்சு குழிபறிச்ச 
நெஞ்சம் இல்லா மனுசங்களா 
கோட்டையிலே உட்கார வச்சா
ஏழை கோவணத்த பிடுங்குவிங்களா
நாத்த புடிச்ச கூவத்திலேயே 
நாங்க பொழைப்ப தொடர்ந்திடவா
பெரியார் அண்ணா கலைஞர் எம்சியாரு 
அவங்க மீட்ட தமிழகத்த
உங்க ஆட்சிய காப்பாத்த 
எங்க உசுறு அடகுப்பொருளா
பத்துக்கு பத்து மதிப்பெண் வாங்கினா
கொடுகறத்துக்கு என்ன? மருத்துவப்படிப்பு
அதுக்கு அப்புறமு நீட் இன்னா 
பனண்டு ஆண்டு படிப்பு எதுக்கு?
எவன்டா நியாயக்காரன் இளப்பமா தமிழன்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.