கவிதை உறவு அமைப்பு நேற்று குவியம் செயலியில் முன்னெடுத்திருந்த கவிஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கவிஞர்களுக்கு வழங்கியிருந்த தலைப்பு: இறங்கி வாருங்கள் இறைவர்களே என்பது ஆகும். அந்தச் சந்திப்பில் நான் கலந்து கொண்டு படித்த எனது கவிதை. எதிர்காலத்தில் இறைவராக நான் கருதுவது:
இறங்கி வாருங்கள் இறைவர்களே
இந்தக் கருத்தியலில் எனக்கு உடன்பாடு
எப்பொழுதும் இருந்தது இல்லை.
ஏனென்றால் ஈராயிரம் ஆண்டுகளாய்
மேலதிகாரத்தில் இருப்பவர்கள்
நம்மவர்களும் இல்லை.
நமக்கானவர்களாகவும் இல்லை.
நல்;லவர்களாகவும் இல்லை
நடு நிலையாளர்களாகவும் இல்லை.
நடுகல் நாட்டி வழிபடும் வகைக்கு
தமிழ்ச்சான்றோர் எவரும் ஆங்கே இல்லை.
இறைத்தகுதிக்கான அயலரும் எவரும் இல்லை.
அவர்கள்;:
சிந்து வெளி நாகரீகம் தங்களுடையது இல்லை என்று
கிடப்பில் போட்டவர்கள்
கீழடியைக் கிடப்பில் போட
ஏராளமாய் எத்தனித்தவர்கள்.
கச்சத்தீவை கண்ணை மூடிக்கொண்டு
தாரை வார்த்தவர்கள்.
நாம்தாம் ஏறிப்போக போக வேண்டும்
அதிகாரத்திற்கு ஏறிப்போக வேண்டும்.
பொருளாதாரத்திற்கு ஏறிப்போக வேண்டும்.
அறங்கூற்று மன்ற ஆளுமைக்கு ஏறிப்போக வேண்டும்.
அட்டவணை எட்டை அதிகாரப்படுத்துவதற்கு
ஏறிப்போக வேண்டும்.
கல்வி உடைமையை மீட்டெடுப்பதற்கு ஏறிப்போக வேண்டும்.
கச்;சத்தீவில் தமிழர் ஆளுமைக்கு ஏறிப்போக வேண்டும்.
சிந்து வெளியை மீட்டு நிறுவ ஏறிப்போக வேண்டும்.
எத்தனை எத்தனையோ இழந்திருக்கிறோம்
பல்லாயிரம் ஆண்டுகளாய்.
அத்தனையும் மீட்டெடுக்க ஏறிப்;போக வேண்டும்.
ஹிந்தியை அப்புறப்படுத்தி
அட்டவணை எட்டை அதிகாரப்படுத்த
அத்தனை பேரும் ஏறிப்போக வேண்டும்.
நான் அழைப்பது போரட்டத்திற்கு அல்ல
ஒன்றியத்தை நோக்கிய பயணத்திற்கு-
தமிழர் ஒவ்வொருவரின் தனித்தனியான முன்னேற்;றத்திற்கு.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,232