Show all

வரலாற்றில் யாரும் வழங்கியிராத மிகப் பெரிய அதிகாரம்!

ஆடுகள் எனை நோக்கி வரட்டும்
கோழிகள் எனை நோக்கி வரட்டும்
மீன்கள் எனை நோக்கி வரட்டும்
ஆடுகளே உங்களுக்குச் சிறந்த மதிப்பளிப்பேன்
கோழிகளே உங்களுக்குச் சிறந்த மதிப்பளிப்பேன்
மீன்களே உங்களுக்குச் சிறந்த மதிப்பளிப்பேன்
ஆடுகளே வெட்டுப்படாமலே உணவாவீர்
கோழிகளே வெட்டுப்படாமலே உணவாவீர்
மீன்களே வெட்டுப்படாமலே உணவாவீர்
ஆடுகளே உங்களைக் கெட்டுப் போகாமல் பதப்படுத்துவேன்
கோழிகளே உங்களைக் கெட்டுப் போகாமல் பதப்படுத்துவேன்
மீன்களே உங்களைக் கெட்டுப் போகாமல் பதப்படுத்துவேன்
ஆடுகள் எனை நோக்கி வரும் அதிகாரம்
கோழிகள் எனை நோக்கி வரும் அதிகாரம்
மீன்கள் எனை நோக்கி வரும் அதிகாரம்
ஆடுகளே நேர்மையாக வந்து சேருங்கள்
கோழிகளே நேர்மையாக வந்து சேருங்கள்
மீன்களே நேர்மையாக வந்து சேருங்கள்
ஆடுகளே இனி வெளிப்படையான வெட்டுப்பாடுதான்
உங்களை நான் பார்க்க மாட்டேன் 
என்னை நீங்கள் பார்க்க வேண்டாம்
கோழிகளே இனி வெளிப்படையான வெட்டுப்பாடுதான்
உங்களை நான் பார்க்க மாட்டேன் 
என்னை நீங்கள் பார்க்க வேண்டாம்
மீன்களே இனி வெளிப்படையான வெட்டுப்பாடுதான்
உங்களை நான் பார்க்க மாட்டேன் 
என்னை நீங்கள் பார்க்க வேண்டாம்
இனி குறைந்த ஆட்சி நிறைந்த நிருவாகம்
இனி இரையாகுவை களுக்கான புதிய திட்டம் 
வெட்டுப் படுவோருக்கு அதிகாரம் அளிக்கும் திட்டம்
தயாராகி விட்டது கவலை வேண்டாம்
ஆம்! இன்றே அரங்கேற்றம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.