Show all

12வது தகவல்! தமிழியல் தரவுகள் வரிசையில்

தமிழர் அறிந்திருக்க வேண்டியதும்- தமிழர் கொண்டாட வேண்டியதுமான- தமிழியல் தகவல்களைப்- பதிவிடும் கடமையில்- தமிழ் உறவு குமரிநாடன். இது 12வது பதிவு.

12,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ் முன்னோர் ஆற்றல் மூலங்களாக முதல்நிலையில் முன்னெடுத்தது நிலம். நீர். தீ, காற்று, விசும்பு என்கிற ஐந்திரங்கள்.

இந்த மூன்றும் சார்பு நிலையில் இறை, கடவுள், தெய்வம் என்று தமிழ் முன்னோரால் கொண்டாடப்பட்டன. 

இறை என்ற தலைப்பில் நிலம், நீர், தீ, காற்று என்று இறைந்து கிடக்கிற திரங்கள் பட்டியிலிடப்படுகின்றன. இவைகள் எல்லை உடையவை. தான்தோன்றி இயக்கம் உடையவை. 

கடவுள் என்ற தலைப்பில் ஐந்தாவது திரம் வெளி, விண்வெளி, விசும்பு என்கிற மூன்று நிலைகளில் விசும்பு வைக்கப்படுகிறது. நிலம், நீர். தீ, காற்று என்கிற நாற்திரங்களைக் கடந்தும் உள்ளும் அமைவது வெளி. வெளிக்கு, தொடக்கம் முடிவு என்கிற எல்லை கிடையாது. தான்தோன்றி இயக்கமும் கிடையாது. 

இந்த எல்லையில்லாத வெளியில் நிலம், நீர். தீ, காற்று என்கிற திரங்களும் இத்திரங்களின் மாற்று வடிவங்களான கோள்கள், தனிமங்கள், உயிரிகள், நீங்கள், நான் என்கிற நாமும் இயங்குவதால் இந்த வெளி நம்மால் இயக்கம் பெற்று விண்வெளியாக இறுக்கம் பெறுகிறது. 

அப்படி இயக்கம் பெற்ற விண்வெளி இயக்கம் தந்தவர்களை இயக்குவதற்கான எதிர்இயக்கம் நம்மால் கட்டமைக்கப்பட்டது விசும்பு ஆக நின்று நம்மை இயக்குகிறது. 

விசும்பு என்கிற நிலையில், கடவுளுக்கு- விதி எழுதுகிற அவரவர் விதிக்கிற தனித்தனி எல்லைகளும் இயக்கமும் உண்டு. 

விசும்பு என்கிற கடவுள் பெண்பாலோ ஆண்பாலோ அன்று. விசும்பு என்கிற கடவுள்- நாம் இயங்கி, நம்மை இயக்க, நாம் எழுதுகிற விதிக்கு நம்மை இயக்குவதாகும். 

தெய்வம் என்கிற தலைப்பில்- வீட்டு தெய்வம், ஊர் தெய்வம், குலதெய்வம், காவல்தெய்வம் என்று வாழ்ந்து இறந்த (இறையோடு கலத்தல்) காலமான (காலத்தோடு கலத்தல்) தம்முன்னோர்களைக் குறிப்பிட்டு கொண்டாடினர் தமிழ்முன்னோர். தம்மின் தம்மக்கள் அறிவுடைமை என்று தமிழ்முன்னோர் கொண்டாடுகிற வகைக்கு நமது முன்னோர்கள் விசும்பில் பதிவிட்ட விதிகளை அடிப்படையாகக் கொண்டு நாமும் நமக்கான விதிகளை விசும்பில் பதிவு செய்து, விசும்பு இயக்கும் வகைக்கு நாம் இயங்குகிறோம். 

இந்த அடிப்படைகளையெல்லாம் இழந்து, ஓர் இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ்மக்கள் வெறுமனே தமிழ்பேசுகின்ற தனித்தனி தமிழர்களாக அயல் சார்புகளில், அயல் வரிசைகளில் இடம் போட்டு இயங்கி வருகின்றோம். அது அவரவர் ஐம்பத்தெட்டு அகவைகளுக்கான பிழைப்பாக மட்டுமே முன்னெடுக்கப் பட்டு வருகிறது. 

அந்த வகையில் நம்முடைய வீட்டுதெய்வங்களின் விசும்புப் பதிவும்- அயல் சார்புகளாகவே இருப்பதால் இன்றைக்கு ஒவ்வொருதமிழனும் அவனவன் அறிவுக்கு தனித்தனியாக விதி எழுத வேண்டிய கட்டாயத்தில் அல்லாடிக் கொண்டிருக்கிறான். 

நாம் நமது குலதெய்வங்களில் திருவள்ளுவர், தொல்காப்பியர், இளங்கோ அடிகள், கணியன் பூங்குன்றனார் என்று- பார்ப்பனிய, ஐரோப்பிய, அராபிய, மார்க்சிய அயல் வரவுகளுக்கு முந்தைய முன்னோர்களைத் தேடிதேடித் பட்டியல் இட்டு அவர்கள் வழியில் நாம் நமது விசும்புப் பதிவை முன்னெடுத்தால் நாமும் ஒட்டுமொத்த இனமாக முன்னேறலாம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,169.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.