01,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சல்லிக்கட்டு கடல்தனிலே கரையோரம் உறங்க இடம் பிடித்து தடம் பதித்த உன்ஆற்றல் போற்ற அண்ணாவின் அறிவகத்தில் நின்று தமிழ் காக்க சிலையாக்கி மகிழ்கின்றார் உன்தம்பி மார்கள் பகுத்தறிவு பகலவனின் பாசறையில் இருந்து தொகைப் பாட்டை வகைவகையாய் கற்று வெளி வந்தாய் சீறுகின்ற சிறுத்தையென பகைமுடிக்க வந்தாய் ஆரியரை ஐயோவென அலறவிட வந்தாய் தமிழகத்தை சிறப்பாக ஆண்டிட்ட தலைவன் திராவிடத்து இயக்கத்தின் இரண்டாவது முதல்வன் முத்து வேலர் அஞ்சுகத்தின் முகம்பார்த்து தோன்றி திருக்குவளை கிராமத்தை பெருமை கொள வந்தாய் முத்தமிழும் உன்நாவில் களிநடனம் புரியும் திருவாரூர் ஓடாத தேர்இழுத்தாய் நீயே நீதிக்கட்சி அழகிரிதாம் உமைஎமக்குத் தந்தார் இராசகுமாரி தொடங்கி பொன்னர்சங்கர் வரை அறுபத்தி நான்கு ஆண்டுகளாய் திரையுலகில் நின்றாய் சிவாஜிக்கு பராசக்தி மனோகரா எனும்படங்கள் எம்ஜிஆருக்கு மந்திரி குமாரி, மலைக்கள்ளன் எனும் படங்கள் வெற்றிபெற கதைவசனம் வடித்ததமிழ் புலவன் ஆறுவரலாற்று புதினம் தந்து வரலாறாய் ஆனவனே பத்து சமூகநாவல் எழுதி சமூகப் பற்றில் உயர்ந்தவனே உதயசூரியன் சின்னமொடு நாடகமும் கண்டாய் சுற்றிய ஊர்களை சிறை பிடித்து கண்டாய் இனியவை இருபது பதிமூன்று முறை மன்றம் சென்றாய் தமிழ்ச் சட்டம் போட இன்று உன் புகழ் பாட சிலை கண்டோம் வாழ்க நீ எம்மான் -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,002.