தமிழர் அறிந்திருக்க வேண்டியதும்- தமிழர் கொண்டாட வேண்டியதுமான- தமிழியல் தகவல்களைப்- பதிவிடும் கடமையில்- தமிழ் உறவு குமரிநாடன். இது 13வது பதிவு. 07,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ் அடிப்படைகளுக்கு எதிரான வட இந்தியக் கட்சிகளையோ. அந்த வடஇந்திய கட்சிகளுக்கு காவடிதூக்கும் தமிழ்நாட்டு கட்சிகளையோ, தமிழ்நாடு புறக்கணித்தே வந்திருக்கிறது. அதிமுகவை எம்ஜியார் அவர்கள் தொடங்கிய பிறகு, காங்கிரசுக்கு காவடிதூக்கிய திமுக புறக்கணிக்கப் பட்டே வந்திருக்கிறது. தமிழ் அடிப்படைகளுக்கு எதிரான காங்கிரசையும், பாஜகவையும் என்றைக்கும் தமிழ்நாடு அங்கீகரிக்காது. அவைகளுக்கு காவடிதூக்கும் கட்சிகளுக்கும் அவ்வாறான நிலையே பேணப்படும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,194.
பாஜகவிற்கு காவடிதூக்கிய அதிமுக தற்போது புறக்கணிக்கப் பட்டிருக்கிறது.