இன்றைய நாளுக்கான கணியக்கலைகுறிப்பு! நாள்: 26,தை,தமிழ்த்தொடராண்டு-5123 தமிழர் அறிந்திருக்க வேண்டியதும் உலகினர் தேடிய இந்தியா இருவேறாக இருந்தன.
நாள்இயல்பு: புகழ்
கோள்: செவ்வாய்க்கிழமை
கோள்இயல்பு: முனைப்பு
தமிழர் கொண்டாட வேண்டியதுமான
தமிழியல் தகவல்களைப்
பதிவிடும் கடமையில்
தமிழ் உறவு குமரிநாடன்.
இது மூன்றாவது பதிவு
ஒன்று நாவலந்தேய ந்தேயா.
மற்றது காந்தார அல்ஹிந்த் (ஹிந்துஸ்தான்).
கடலை எல்லையாகக் கொண்டவர்கள்- தங்கள் நாட்டுக்கு வந்து வணிகம் புரிந்திருந்த தமிழர்களைத் தேடியது நாவலந்தேய ந்தேயா.
இந்தியாவோடு தரைப்பகுதியால் இணைந்தவர்கள்- தங்களிடம் இருந்து நாடோடியாக பிரிந்து சென்றவர்கள் வாழும் மண்ணாகத் தேடியது காந்தார ஹிந்தியா.
அதனால் இந்தியா என்ற பெயர் நாவலந்தேயத்தில் இருந்து முகிழ்த்ததாக ஒரு சாரராலும்,
சிந்து- காந்தாரம் என்பதிலிருந்து முகிழ்த்ததாக ஒரு சாரராலும், சொல்லப்பட்டாலும்
இரண்டும் இரு வேறு என்பதே உண்மை.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,153.