Show all

ஆறாவது தகவல்! தமிழியல் தரவுகள் வரிசையில்

தமிழர் அறிந்திருக்க வேண்டியதும்- தமிழர் கொண்டாட வேண்டியதுமான- தமிழியல் தகவல்களைப்- பதிவிடும் கடமையில்- தமிழ் உறவு குமரிநாடன். இது ஆறாவது பதிவு

 

திருவள்ளுவர் வாழ்த்து எழுதியது இறைக்கோ, தெய்வத்திற்கோ அல்ல. மொழிக்கே! முதல் அதிகாரத்தின் பத்து குறள்களையும் மீண்டும் மீண்டும் எந்த சார்பும் இல்லாமல் மற்ற மற்ற குறள்களையே பொருத்தி பொருத்தி ஆய்ந்தோமேயானல் தெளிவாகப் புரியும்.

 

திருக்குறளில் உள்ள அகரம், எண்குணத்தான், பொறிவாயில் ஐந்தவித்தான், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான் எல்லாமே அறிவான தமிழ் மொழியைக் குறிப்பதற்கானவைகளே. 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு 
இது திருவள்ளுவரின் முதல் குறள்.
அதாவது:-
1.அகர முதற்றே எழுத்தெல்லாம்.
2.ஆதிபகவன் முதற்றே உலகெல்லாம்

உல் என்றால் வட்டம். அதனால் தமிழர் நமது புவியை மட்டுமல்லாமல்- வட்டமான கோள்களை எல்லாம் உலகம் என்றே குறிப்பிட்டனர். அந்த வகையாக ஏழுகோள்களை தமிழர் ஏழுலகம் என்று சொல்ல, ஏழுலகத்திற்கு பார்ப்பனியர் வேறு பொருள் கற்பிக்கப் போய், இன்றைக்கு ஏழு உலகம் வேறாகவும் ஏழு கோள்கள் வேறாகவும் பார்க்கப்படுகிறது.

எழுத்துக்களுக்கு அகரம் முதல்.
கோள்களுக்கு ஞாயிறு (ஆதிபகவன்) முதல். இந்தக் குறளில் திருவள்ளுவர் போற்ற வந்தது அகரத்தை. 

ஆனால் பார்ப்பனியச் சார்பாளர்களோ, திருவள்ளுவர் போற்றிய அந்த ஆதிபகவன் என்ற சொல்லுக்கு ஆன்மீகச் சாயம் பூசி விட்டார்கள்.

இரண்டாவது குறளில் திருவள்ளுவர் இன்னும் தெளிவாகவே தான் குறிக்க வந்த அகரத்திற்கு பெருமை சேர்க்கிறார். கல்விக்கு அடிப்படையான எழுத்துக்களை- எழுத்துக்கு முதலான அகரத்தை- அகரம் முதலாக னகரம் வரையான முதல் எழுத்துக்களாக முப்பது எழுத்துக்களைப் பெற்றிருக்கிற தமிழ் அடிப்படையை (நற்றாள்) போற்றிக் கொள்ளாமல் (தொழாமல்) விடுவோமானால் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன என்று கேள்வி எழுப்புகிறார். 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,156.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.