Show all

ஏழாவது தகவல்! தமிழியல் தரவுகள் வரிசையில்

தமிழர் அறிந்திருக்க வேண்டியதும்- தமிழர் கொண்டாட வேண்டியதுமான- தமிழியல் தகவல்களைப்- பதிவிடும் கடமையில்- தமிழ் உறவு குமரிநாடன். இது ஏழாவது பதிவு

மந்திரம்.
மந்திரம் என்பது பொருள் பொதிந்த தமிழ்ச்சொல். 
மந்திரத்திற்கு நேரான சொல் உலகின் எந்த மொழியிலும் இல்லை. 
மந்திரம் என்பது மாயமல்லளூ மாய்மாலமல்லளூ வித்தையல்ல. அந்த வகைத் தகவல்களுக்கு மந்திரம் என்று பெயரிட்டு மந்திரம் என்ற பொருள் பொதிந்த தமிழ்ச்சொல்லை வீணடித்து விடக் கூடாது
மந்திரம் என்பது மனத்திரம். 
திரம் என்பது திரண்ட என்று குவிக்கப்பட்ட ஆற்றல். 
திறன் என்பது திற, திறப்பு என்று வெளிப்படுத்தப் பட்ட ஆற்றல் 
தமிழில் ஐந்திரம் என்று அழைக்கப் படுகிற நிலம், நீர், தீ, காற்று, விசும்பு ஆகியவற்றில் நமது எண்ணங்கள் இயக்கமில்லாத வெளி, விண்வெளி, விசும்பு என்ற மூன்று நிலைகளை உடைய விசும்பு ஆற்றலில் பதிவாகி நமக்கு நாமே எழுதிக் கொள்கிற விதியாகிறது. 
நமது எண்ணங்களை வெற்றிகரமான விதியாக்கிக் கொள்வதற்கு எப்படி யெல்லாம் எண்ணங்களை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ் முன்னோர் ஆய்ந்து கண்ட கலைதான் மந்திரம்.

இந்தத் தகவலுக்கான ஒன்னே முக்கால் அடி குறள்தான்:
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்
எனும் குறள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.