இன்று நாள்: 15மாசி தமிழ்த்தொடராண்டு-5124. தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,537. எவ்வளவு உயரம் வேண்டுமானாலும் வளர முடியும்
எவ்வளவு வெற்றி வேண்டுமானாலும் குவிக்க முடியும்
எவ்வளவு மகிழ்ச்சி வேண்டுமானாலும் அள்ள முடியும்
எவ்வளவு பணம் வேண்டுமானாலும் ஈட்ட முடியும்
எவ்வளவு புகழ் வேண்டுமானலும் எட்ட முடியும்
கடவுள் எது என்று புரிந்து கொண்டால்
கடவுளின் வேலை என்ன என்று தெரிந்து கொண்டால்
படிப்படியாய் தொடர்ந்துயர படிகட்டே கடவுள்
என்பதாக கண்டுகொண்ட என்தமிழ் முன்னோர்கள்
நாம் இயங்க இந்த வகைக்கு
முன்னெடுத்தனர் நிமித்தகம் கணியத்தின் பின்
கிளவியாக்கத்தில் கிடைத்த ஆறாம் அறிவுப் புலன்
மனத்தின் திரமாய் மந்திரமெனும் கலையை
கற்போம் மந்திரம் கடைபிடிப்போம் வாழ்க்கையில்
வளர்வோம், குவிப்போம், அள்ளுவோம், ஈட்டுவோம்
எட்டித் தொடுவோம் புகழதனை
உலகில் தமிழன் ஒப்புரவு தலைமையேற்கவே