16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று இயற்கையெய்தினார். செந்தமிழ்க்கோ கோபெநா. கனவுகளோடு சுற்றிய இளைஞர்களைக் கவிதைகளோடு சுற்றவைத்து மேட்டூருக்கு பாட்டூர் என்ற பாராட்டைப் பெற்றுத் தந்தவர். மேட்டூரில் எந்தவொரு இலக்கிய அமைப்பும், அவரின் இருப்பின்றி தொடங்கப் பட்டதில்லை. தமிழியக்கம், தமிழ்ச்சங்கம், மேட்டூர் அனல்மின் இலக்கிய வட்டம், மால்கோ தமிழ்இலக்கியமன்றம், புதுச்சாம்பள்ளி தாய்த் தமிழ் தொடக்கப்பள்ளி, விசும்பு மாதஇதழ், தேடல், இப்படி பற்பல. ஒற்றைப் படைப்பும் அவரின் வாழ்த்தின்றி வந்ததில்லை ஒற்றைப்படைப்பாளியும் அவரின் வழியின்றி உயர்ந்ததில்லை இதோ இன்றும் ஒன்று சேர்ந்திருக்கிறோம் அவரின் இருப்பின்றி வாழ்த்தின்றி வழிகாட்டுதலின்றி..... அசைவற்றுக்கிடக்கும் எங்கள் தமிழ்த்திசை காட்டி காற்றில் கலந்த மூச்சினூடாய் இசைத்துக்கொண்டே இருக்கிறார் பாலமலைப் பாடல்களையும் கொல்லிமலைப் பாடல்களையும்....... சென்று வாருங்கள் ஐயா நீங்கள் தந்த உணர்வை 'அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வோம்' என்ற உங்கள் மாணவர்களாய் உறுதிமொழியை. நிறைவாய்க் கேட்டு. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,989.