இன்றைய நாளுக்கான கணியக்கலைகுறிப்பு! நாள்: 27,தை,தமிழ்த்தொடராண்டு-5123 தமிழர் அறிந்திருக்க வேண்டியதும் ஐரோப்பியர் நாள் தொடக்கம் நள்ளிரவு. நள்ளிரவை நாள் தொடக்கமாகக் கொண்டுள்ள ஐரோப்பியர் ஆண்டு தொடக்கம், கிறித்து பிறப்பை அடிப்படையாகக் கொண்டு கிமு, கிபி என்று கணக்கிடப்படுகிறது. ஆரியர் ஆண்டுக் கணக்கு நிலவை அடிப்படையாகக் கொண்டது. ஆரியர் விழாக்கள் ஆண்டுக்கு ஒரு முறை வரும் அதே திதியில் கொண்டாடப்படுகிறது. தமிழர் ஆண்டு- ஞாயிறு தோற்றத்து நேரத்தில் தொடங்கும் நாள் போலவே, ஞாயிற்றின் வேனில் தொடக்கமான இளவேனில் சித்திரையில் தொடங்குகிறது. தமிழர்களுக்கு தொடர் ஆண்டுக் கணக்கும் உண்டு. தமிழர் விழாக்கள் தை 1 பொங்கல், ஆடி 18 நீர்ப்பெருக்கு விழா, என்று நாள் அடிப்படையிலும்,
நாள்இயல்பு: போரியல்
கோள்: புதியம் கிழமை
கோள்இயல்பு: பயணம்
தமிழர் கொண்டாட வேண்டியதுமான
தமிழியல் தகவல்களைப்
பதிவிடும் கடமையில்
தமிழ் உறவு குமரிநாடன்.
இது நான்காவது பதிவு
ஆரியர் நாள் தொடக்கம் நண்பகல்.
தமிழர் நாள் தொடக்கம் அதிகாலை ஞாயிறு தோற்றம்.
கிபி நடப்புத் தொடராண்டு 2022 ஆகும்.
எடுத்துக்காட்டு விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி, ராமநவமி, விஜயதசமி இப்படி.
தொடர் நாள் கணக்கும் உண்டு.
நடப்புத் தமிழ்த் தொடராண்டு 5123
இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,154.
கார்த்திகை மாத ஆரல் நாள்மீனில் விளக்கேற்றுத் திருவிழா என நாள் மீனிலும் கொண்டாடப்படும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,154.