Show all

15வது தகவல்! தமிழியல் தரவுகள் வரிசையில்

தமிழர் அறிந்திருக்க வேண்டியதும்- தமிழர் கொண்டாட வேண்டியதுமான- தமிழியல் தகவல்களைப்- பதிவிடும் கடமையில்- தமிழ் உறவு குமரிநாடன். இது 15வது பதிவு.

08,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: உலகின் அறிவாளர்கள் உயிர்த்தோற்றம் கடலில் நிகழ்ந்தாகவே நம்புகின்றனர். தமிழ்முன்னோர் முதனெப்படுவது இடமும் காலமும் என்று இரண்டின் அடிப்படையை முன்னெடுக்கிற காரணம் பற்றி உயிர்த்தோற்றம் இரண்டு இடங்களில் நிகழ்ந்திருக்கக் கூடும் என்று கருதியிருந்தனர். 

உலக உயிரிகள் 'நீரில் மட்டும் வாழ்வன' 'நிலத்தில் மட்டும் வாழ்வன' என்கிற இரு வகையினைக் கொண்டுள்ளன. நிலத்திலும் நீரிலும் வாழும் உயிரிகளை தனியினமாகக் கொள்ளுவதும் பொருந்தும்.

தமிழர் சுட்டுகிற மலையும் மடுவும் ஒன்றுக்கொன்று எதிர்நிலை உடையது. 'நிலத்தில் மட்டும் வாழ்வன' 'நீரில் மட்டும் வாழ்வன' என்கிற இந்த எதிர் நிலையுடைய உயிரிகளில் 'நிலத்தில் மட்டும் வாழ்வன' மலையிலும் 'நீரில் மட்டும் வாழ்வன' கடலிலும் தோன்றியிருக்கலாம். அந்த இருவகைகளில் ஒன்றை மட்டுமே தூக்கிப்பிடித்து, உலகின் அறிவாளர்கள் உயிர்த்தோற்றம் கடலில் நிகழ்ந்தாகவே நம்புகின்றனர்.

தமிழ்முன்னோர் தெரிவிக்கிற எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்கிற வரையறையில்- இடம், வலம் ஆகிய இரண்டு சொற்கள் குறித்த வரையறை மீட்பு இந்த ஆய்வுக்கு நமக்கு பெரிதும் உதவும்.

தமிழ்முன்னோரின், 'முதலெனப்படுவது இடமும் காலமும்' என்கிற பொருத்தப்பாடை போன்றே இடப்பக்கம் - வலப்பக்கம், இடது - வலது, இடக்கை - வலக்கை என்பவைகளிலும் அதே பொருளில் உள்ளதைக் காணலாம். அதாவது இயக்கம் இல்லாத இருப்பு நிலையை குறிக்கப் பயன்படுகிறது இடம். 

இருந்த இடத்தில் இருந்து கொண்டு, குருதியை உடலெங்கும் பாய்ச்சும் இதயம் இடப்பக்கமே உள்ளது. அதன் பாதுகாப்பு கருதியே வலக்கையை இயக்கத்திற்கு அதிகம் பயன்படுத்திகின்ற நிலை உள்ளது. இதன் காரணம் பற்றியே, தமிழ்முன்னோர் கைகளுக்கு இடம் வலம் என்று பெயர் சுட்டி நிறுவியுள்ளனர் என்று அறிந்து கொண்டாட முடிகின்றது.

இடத்தின் எதிர்ச்சொல்லாக வருகிற வலம் என்பது வலசை, வலிந்து, வலிமை என்று இயக்கம் குறித்து அமைகிறது. அதே போல திசைகளில் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என்பதில் வடக்குக்கு ஒரு இருப்பு நிலை இருக்கிறது. 

தமிழர்வடக்கு என்பது தமிழர் தம் நாவலந்தேயத்திற்கு (இந்தியா) வடக்கில் அமைந்த இமயமலையாகும். தமிழில் வடக்கிருத்தல் என்ற ஒரு சொல் உண்டு. அந்த வடக்கிருத்தலுக்கு உயிர் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளுதல் என்று பொருள். போர்க்களத்தில், நெஞ்சில் பாய்ந்த வேல் முதுகை துளைத்துவிட்டால் இந்த வடக்கிருத்தலை அந்தக்கால தமிழ்மன்னர்கள் முன்னெடுத்திருந்தனர்.

வடக்கு திசையானது- தமிழ்ப்பகுதியின் இடப்பக்கம் அமைந்த காரணம் பற்றியும், வடக்கு திசையில் அமைந்த இமயமலை- தமிழர் உயிர்தோற்றம் பெற்ற இடம் காரணம் பற்றியும், முதலெனப்படுவதில் ஒன்றான இடத்தின் இயல்புக்கு வடக்குதிசையும் பொருத்தப்பாடாக்கப்பட்டது.

சங்ககால இலக்கியத்தில் தமிழர்தோன்றிய இடமான இமயமலை பெரிதும் கொண்டாடப்பட்டுள்ளதை பட்டியல் இட்டால் பட்டியல் நீண்டு நமது கருதுகோளுக்கு வலு சேர்க்கிறது.  
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,195.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.