உலகினர் முன்னெடுத்திராத, தமிழ்முன்னோர் மட்டுமே முன்னெடுத்திருந்த, இயல்கணிப்பு என்கிற இயற்றமிழின் ஒரு பகுதியை இந்தக் கட்டுரை விரிவாக அலசுகிறது. 11,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: இயல்கணிப்பு அல்லது இயல்கணக்கு என்பது இயற்றமிழின் இரண்டு பிரிவுகளில் முதலாவது ஆகும்.. இயல்அறிவு இரண்டாவது ஆகும். இயல் அறிவை உலகினர் சயின்ஸ் என்கிற தலைப்பில் முன்னெடுக்கின்றனர். இயல்கணிப்புக்கான தனித்துறையை உலகினர் கொண்டிருக்கவில்லை. ஆனால், இயல்கணிப்பு என்கிற தலைப்பிலான ஆய்வைத் தமிழ்முன்னேர் தெளிவாக முன்னெடுத்திருந்தனர். பழந்தமிழகத்தில் அத்தனை சான்றோர் பெருமக்களும் இயல்கணக்கு என்கிற தலைப்பிலேயே இருந்திருக்கின்றனர் என்பதற்கு பேரளவான சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன. உலகமொழிகளில் தமிழ்மட்டுமே தன் மூலமொழியாக தமிழையே கொண்டுள்ளது. பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு இரண்டிலும், இன்றைக்குச் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிற உலகமொழிகளில், தமிழ் தவிர்த்து வேறு எந்த ஒன்றுக்கும் மூலமொழி சொந்த மொழியாக இல்லை. உலகமொழிகளில் தமிழ்மட்டுமே தன் மூலமொழியாக தமிழையே கொண்டுள்ளது என்கிற சிறப்பிற்கும் சிறப்பாக, பேச்சு மொழிக்கு முந்தைய நெட்டொலிப்பு ஓசை மொழியையும், நெட்டொலிப்பு ஓசை மொழிக்கும் முந்தைய உடலசைவு மொழியையும் தமிழ் என்ற தலைப்பிலேயே கொண்டாடும் பெருமையுடையது தமிழினம். ஆம்! உடலசைவு மொழியை நாடகத்தமிழ் என்றும், நெட்டொலிப்பு ஓசைமொழியை இசைத்தமிழ் என்றும், இயல்பான பேச்சு மொழியை இயற்றமிழ் என்றும் பட்டியலிட்டு அந்த மூன்று தமிழையும் முத்தமிழ் என்று கொண்டாடி நடப்பு நிலை வரை வளர்த்துக் கெண்டிருக்கிறது தமிழினம். நாடகத்தமிழின் விரிவு விளையாட்டும், சல்லிக்கட்டும், போரும் ஆகும். தமிழரின் போர்க்கலையை எட்டுத்தொகை நூல்களும், பொருள் இலக்கணத்தில் புறத்திணையும் பேரளவாகப் பேசுகின்றன. காங்கிரஸ் ஆட்சி முடிக்கப்பட்டு திமுக ஆட்சி தொடர்ந்த நிலையிலும், தமிழ்நாட்டின் தெருவெங்கும் ஹிந்தி திரையிசையும், பல்வேறு மேடைகளில் கர்நாடக சங்கீதமும் ஒலிக்கப்பட்டு வந்த வேளையில்- அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்று தமிழிசையை தேடி, தமிழ்நாட்டின் தெருக்களிலும், மேடைகளிலும் முழக்கப்பட்டு வந்த அயல்இசைகளை ஓட ஓட விரட்டியடித்து தமிழ்;மக்களின் உள்ளந்தோறும் தமிழிசையை முழக்கியவர் இளையராசா என்கிற வரலாற்றோடு, தமிழைச் செம்மொழியாக முழக்கிய ஏ.ஆர்.ரகுமான் இசைத்தமிழின் இன்று வரையான தொடர்ச்சி ஆகும். மூன்றாவது தமிழான இயற்றமிழும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்பதை ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு- பலநூறு அரங்குகளில், பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனையாவது உறுதியான சான்றாவணம் ஆகும். ஆனாலும், இயற்றமிழின்- இயல்அறிவு மற்றும் இயல்கணிப்பு என்கிற இருபெரும் பகுதிகளில் ஒன்றான இயல்கணிப்பு குறித்து பேசும்போது, இயல்கணிப்பு என்கிற தலைப்பிலான ஆய்வைத் தமிழ்முன்னேர் தெளிவாக முன்னெடுத்திருந்தனர் என்று நிறுவ பேரளவான சான்றுகள் இருந்த போதும், அதில் மலைமலைஅடிகள் என்ற ஒன்றை அறிஞர் மட்டுமே இயல்கணிப்பின் நிறைவுப்பகுதியான மனஆற்றல் தலைப்பில் முயன்றார் என்பது இயல்கணிப்பின் நடப்பு நிலைத் தரவு ஆகும். பாவாணர் முதலாவது முன்னேற்றக்கலை நிமித்தகம் குறித்து மட்டும் பேரளவாக எழுதியுள்ளார். ஐரோப்பியர்- தமிழின் சிறப்பு குறித்து பேசியவகைக்கு எழுச்சி பெற்று கட்டப்பட்ட அமைப்புகளே திரவிட இயக்கங்கள் என்கிற காரணம் பற்றி- அதனால் அந்த இயல்கணிப்பை மீட்டு நிறுவும் வகைக்கு உருவாகி, உங்கள் பார்வையில் வலம்வந்து கொண்டிருக்கிறது இந்த இயல்கணிப்பு கட்டுரை. நடப்பு நிலையில், தமிழ்நாட்டின் கல்வித்துறை- உலகினரின் சயின்சை பெருமை பாராட்டி, அந்தத் துறை தமிழ்முன்னோருக்கு இருந்திருக்கவே இல்லை என்பது போல, சயின்சை அறிவியல் என்று இடுகுறியாக மொழிபெயர்த்து பயன்பாட்டிற்கு விட்டுள்ளனர். இந்த மலைப்பு உலகின் முதல் அணைக்கட்டான கரிகால் பெருவளத்தானின் கல்லணைக்கே மறைப்பு கட்டும் வேலையாகும். இயற்றமிழ் என்பது இயல் குறித்து ஆயும் தமிழ் என்கிற பொருளுக்கானது. இயல் என்பதில் இயமும் இயக்கமும் இருக்கிறது. இயம் என்றால் கோட்பாடு என்று பொருள். இயக்கம் என்றால் நடைமுறை என்று பொருள். ஆக இயல் என்பது கோட்பாடும் நடைமுறையும் ஆகும். இயல் உடையதை தமிழ்முன்னோர் இயற்கை என்றனர். கோட்பாடும் நடைமுறையுமான இயல் உடையதை இயற்கை என்றனர் தமிழ்முன்னோர். இயல்அறிவு, இயல்கணிப்பு என்று, பேரளவான இருபகுதிகளை கொண்டது இயற்றமிழ் என்று நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர். இந்த இயல்கணிப்பு என்கிற துறை இன்றுவரை உலகினருக்குக் கிடையாது. இயற்றமிழில் தமிழ்முன்னோர் நிறுவியிருந்த ஒரு பகுதியான இயல்அறிவைத்தான் உலகினர் சயின்ஸ் என்கிற தலைப்பில் பேசுகின்றனர். அந்த சயின்சை தமிழ்முன்னோர் முன்னெடுத்திருந்த இயல்அறிவு என்று அடையாளம் காட்ட முனையாமல், நடப்பு நிலையில், தமிழ்நாட்டின் கல்வித்துறை- அறிவியல் என்று மொழிபெயர்த்து புழங்கி வருகிறது. இயற்றமிழின் இருபெரும் பகுதிகள்: 1.இயல்கணிப்பு. 2. இயல்அறிவு. இயலின் இயல்புநிலை அறிவது இயல்அறிவு. இயலின் இயக்கநிலை (காலம் குறித்தது) கணிப்பது இயல்கணிப்பு. இயல்கணிப்பு- கடந்த காலத்தை உள்ளாய்ந்து, நிகழ்காலத்தோடு பொருத்தி, எதிர்காலத்தைக் கணிப்பது ஆகும். இயல்அறிவில் உயிரிகளைப் பற்றிப் படித்தால் அது உயிரியில். இயல்அறிவில், அந்த உயிரிகளில் விலங்குகளைப் பற்றி படித்தால் அது விலங்கியல், அந்த விலங்குகளுக்குள் உருவாகிற குறுவிகளைப் (வைரஸ்) பற்றி படித்தால் குறுவியியல். பொருட்களின் பரிமாண அடிப்படைகளைப் பற்றிப் படித்தால் அது பரியியல் (பிசிக்ஸ்) பொருட்களின் வேதியியல் தன்மைகளைப் பற்றிப் படித்தால் அது வேதியியல் (கெமிஸ்ட்ரி) இவையெல்லாம் இயலின் நிலை பற்றி பேசுகிற இயல்அறிவு என்கிற பகுதிக்குரியன. இவைகளுக்கு இத்தனைப் படிப்புகள் உள்ளன. சில படிப்புகளுக்கு நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் எல்லாம் உள்ளன, தன் வயிற்றில் குழந்தை உருவானதும், அது ஆணா? பெண்ணா? என்கிற ஆர்வம் தலைவிக்கும் தலைவனுக்கும் வருகிறது. நமது குழந்தை பெண்ணாக இருக்க வேண்டும் என்பதில் தொடங்கி, அது அழகாக இருக்க வேண்டும். அது அன்பாக இருக்க வேண்டும். நன்றாகப் படிக்க வேண்டும். நிறைய அறிவு வேண்டும். மருத்துவராக வரவேண்டும் என்பனவாக- அந்த குழந்தையின் ஒட்டுமொத்த இயக்கம் குறித்து நமது எதிர்பார்ப்பு விரிகிறது. எதிர்பார்ப்பு எதிர்காலம் குறித்தது. எதிர்காலம் என்பது இயக்கம் குறித்தது. இப்படியாக இயலின்இயக்கத்தை கணிப்பது குறித்ததே இயல்கணிப்பு என்கிற பகுதியாகும். ஆக இந்த எதிர்காலம் குறித்த கணிப்பை நிறுவ நிகழ்காலத்தைப் படிக்க வேண்டும் என்று கருதினர் தமிழ்முன்னோர். அந்த வகையில் இயல்கணிப்பில் தமிழ்முன்னோருக்கு முதலாவதாகக் கிடைத்த கலை நிமித்தகம் என்கிற காலக்கலை ஆகும். இது தனிமனிதனின் எதிர்காலம் குறித்து அறிந்து கொள்ள நிறுவப்பட்ட கலையாகும். இதில் மழை வெயில் குளிர் பருவம் ஆண்டு, மாதம், நாள், நாழிகை, விநாழிகை, தற்பரை என்பனவெல்லாம் கிடைத்து இயற்கையின் எதிர்காலத்தை கணிக்க முடிந்தது. தனிமனிதனின் எதிர்காலம் குறிப்பதற்கு சாதகமும் கணிக்கப்பட்டது. சோதிடமும் அறியப்பட்டது தமிழ்முன்னோரால். உயிர்வளியையும், நீர்வளியையும் சேர்த்தால் தண்ணீர் கிடைத்து விடும். அந்த தண்ணீர் வெப்பத்தால் ஆவியாகும், குளிர்ந்தால் மீண்டும் நீராகும், என்று அறிந்து கொண்டாலும், அதன் தொடர்ச்சியான மழை எப்போது வரும்? எவ்வளவு வரும் என்று கணிப்பதில் சிக்கல் கூடுதல் ஆகிறது. காரணம் அந்தச் சுழற்சியில் தாவரங்களும், விலங்குகளும், மனிதனும் இணைந்து கொள்கிறோம் என்பதுதான். அக இயல்கணிப்பை, இயல்அறிவைப் போல உறுதியானதாக அறிவிக்க முடியாமல் போவதற்கான காரணம், இயற்கையின் இயக்கச் சுழற்சியில் மனிதனும் மனிதனுக்குக்குக் கிடைக்கப்பெற்ற ஆறாவது அறிவும் இணைந்து கொள்ளுகிற காரணத்தால் இயற்கைக்குப் போட்டியாக மனிதன் முன்னெடுக்கிற செயற்கையும் இயல்கணிப்பை உறுதியாக்குவதில் சிக்கலாக களமாடுகிறது. தமிழ்முன்னோர் முதலாவதாக முன்னெடுத்த முன்னேற்றக்கலையான சாதகம் சோதிடத்தில் சொல்லப்படுகிற கடந்தகாலம் குறித்த பலன் மிகச்சரியாக இருப்பதையும், எதிர்காலம் குறித்து சோதிடர் சொன்ன பலன் அவ்வளவாக பலன் அளிக்கவில்லை என்பதால்- சோதிடர் பிழையா? சோதிடம் பிழையா என்கிற கேள்வி எழுந்ததிலும் தமிழ்முன்னோர் கற்ற செய்தி சோதிடரும் பிழையில்லை. சோதிடமும் பிழையில்லை. சொல்லப்பட்ட எதிர்காலப்பலன் மீது சோதிடம் கேட்டவர் முன்னெடுத்த எண்ணமும் பரபரப்பும் என்பதாகும். இதனால் தமிழ்முன்னோர் சோதிடக்கலைக்கு நாற்பது மதிப்பெண் அளித்து அதனினும் மேம்பட்ட கலையான கணியத்தைக் கட்டமைத்தனர். கணக்கில் (கணிப்பு) அடிப்படை எண்களான 1.உழைப்பு, 2.மேலாண்மை, 3.முனைப்பு, 4.பயணம், 5.கலை, 6.தொழில்நுட்பம், 7.கமுக்கம் அல்லது செல்வம், 8.புகழ் அல்லது பேரளவு, 9.தனிமுடிவு அல்லது போரியல் என்கிற ஒன்பது இயல்களில் பெயர்களைச் சூட்டிக்கொண்டு தங்கள் தங்கள் இயல்பை வலுப்படுத்திக் கொள்கிற கலையாகும் கணியம். கணியத்தின் மீதும் செயலும், எண்ணமும், ஆறாவது அறிவும் வினையாற்றி உரிய பலனை பெற இயலாமல் போகவே கணியத்திற்கு அறுபது மதிப்பெண் அளித்து அதனினும் மேலான கலையான மந்திரத்தை நிறுவினர். பிறந்த நேரத்து பலன்களை அறிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இல்லாமல், நல்லநேரம் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லாமல், சாதக அடிப்படையிலோ, கணிய அடிப்படையிலோ பெயர் அமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லாமல், சோதிடப்பலன்களையும், கணியப்பலன்களையும் எந்த மனித அறிவு கேள்விக்குள்ளாக்கியதோ- அந்த மனித அறிவுக்கான புலனான மனத்தின்திரம் மந்திரம் என்று அந்த அறிவாலேயே, கடவுளில் நம்முடைய தலையெழுத்தை நாமே எழுதிக் கொள்கிற கலையாக மந்திரத்தை மூன்றாவது முன்னேற்றக் கலையாக உருவாக்கி இயல்கணிப்பை நிறைவு செய்தனர் தமிழ்முன்னோர். மந்திரத்திற்கு விசும்புதிரமே அடிப்படையாகும். விசும்பு திரத்தை கடவுள் என்று நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர். கடவுள்- நீங்கள் எண்ணியதை உங்களுக்குக் கொடுக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. கடவுள்- நீங்கள் கேட்டதை உங்களுக்குக் கொடுக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. அதனால் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதையே மற்றவர்களுக்கு கொடுத்திருங்கள். அதனால் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதுவே எப்போதும் உங்கள் சிந்தனையாக இருக்கட்டும். அதனால் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை மட்டுமே கடவுளிடம் கேட்டிருங்கள். உங்கள் செயல், எண்ணம், மொழி ஆகிய மூன்றும்; ஒவ்வொரு தற்பரை நேரமும் கடவுளிடம் பதிவாகிறது. அந்தப் பதிவின் அடிப்படையிலேயே கடவுள் உங்களுக்கானவைகள் மற்ற மற்றவர்களிடம் இருந்து உங்களுக்குக் கிடைக்கும் வகைக்கு ஒருங்கிணைக்கிறது. அயல்இயல்களின்- மனிதப்பாகுபாட்டு ஏற்றதாழ்வுக் கட்டமைப்பான நல்லவர் கெட்டவர், பெரியவர் சிறியவர், பணக்காரர் ஏழை, அறிவாளி முட்டாள், ஞானம் பெற்றவன் ஞானம் பெறாதவன் போன்ற தலைப்புகளைக் கடவுள் மீது திணிக்காமல், அவர் கெட்டவர், இவர் கெட்டவர் என்கிற புலம்பலை விட்டுத்தள்ளி, உங்களுக்கு என்ன தேவையோ அதை மற்றவர்களுக்குக் கொடுத்திருங்கள். நீங்கள் ஒன்று கொடுத்தால் உங்களுக்கு பத்தாக நூறாக என்று வேறு இடத்தில் இருந்து உங்களுக்குக் கிடைக்கும். அவர் கெட்டவர், இவர் கெட்டவர் என்கிற புலம்பலை விட்டுத்தள்ளி, உங்களுக்கு என்ன தேவையோ அது குறித்து மட்டும் சிந்தித்திருங்கள். அவர் கெட்டவர், இவர் கெட்டவர் என்கிற புலம்பலை விட்டுத்தள்ளி, உங்களுக்கு எண்ண தேவையோ அதைமட்டும் கடவுளிடம் கேட்டிருங்கள். உறுதியாகக் கிடைக்கும். இதுவரை உங்களுக்குக் கிடைத்தவைகள் அனைத்தும் நீங்கள் கடவுளிடம் கேட்டிருந்தவை மட்டுமே என்பது உறுதியான உண்மை. என்பதை விரிவாகப் பேசுகிற கலை மந்திரம் ஆகும். ஆக தமிழர் இயல்கணிப்பு, நிமித்தகம், கணியம், மந்திரம் என்கிற மூன்று முன்னேற்றக்கலைகளை உள்ளடக்கியது ஆகும்.
இன்றுவரையிலும் கூட உலகினர் களம் இறங்கியிராத, தமிழ்முன்னோரால் சிறப்பாக நிறுவப்பட்டிருந்த இயல்கணிப்பு, பார்ப்பனியர் மடைமாற்றத்தில் ஜோதிடமாக, பக்தியாக, ஆன்மீகமாக பார்ப்பனிய வழிகாட்டிகளால் தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வந்த காரணம் பற்றி-
அந்தப் பக்தி ஆன்மீக மடைமாற்றங்கள் பொய்யும் புனைவுகளும் என்கிற நிலையில்-
பார்ப்பனிய ஜோதிட பக்தி ஆன்மீக மடைமாற்றமாற்றத்திற்கே அடிப்படையான, இயல்கணிப்பை மூடநம்பிக்கைகள் என்று ஒட்டுமொத்தமாகக் கருப்புத்துணி போர்த்தி மூடி விட்டன திராவிட இயக்கங்கள்.
கடவுள்- நீங்கள் கொடுத்ததை உங்களுக்கு கொடுக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,533.