தமிழர் அறிந்திருக்க வேண்டியதும்- தமிழர் கொண்டாட வேண்டியதுமான- தமிழியல் தகவல்களைப்- பதிவிடும் கடமையில்- தமிழ் உறவு குமரிநாடன். இது எட்டாவது பதிவு. ஒரு பார்ப்பனர் தன்மொழியில் (சமஸ்கிருதம்) ஒரு பத்துபேருக்காக மந்திரம் ஓதும் போது, அவர் வளமடைகிறார். ஒரு நூறுபேருக்காக மந்திரம் ஓதும் போது, அவர் குடும்பமும் வளமடைகிறது. ஆயிரம் ஆயிரம் பேர்களுக்கு மந்திரம் ஓதும் போது, அவர் இனமே வளமடைகிறது. காரணம்: அவர் மொழியில் (சமஸ்கிருதம்) அவர் ஓதும் மந்திரம் அவருக்கானது. அடுத்தவர்களுக்காக ஓதுவது மந்திரம் ஆகாது. அது வாழ்த்து மட்டுமே. நீங்கள் வளமடைய, உங்கள் குடும்பம் வளமடைய, உங்கள் இனம் வளமடைய நீங்கள்தாம், உங்கள் தாய்மொழியில்தாம் (தமிழ்) மந்திரம் ஓத வேண்டும். அந்த வாய்ப்பு உங்கள் குலதெய்வக் கோயில்களில் கிடைத்தால் முன்னெடுங்கள். கிடைக்காவிட்டால் அதற்காக செயலாற்றுங்கள். வேறுவகையாக- உங்கள் உறவுகள் நண்பர்களோடு அதிகம் கலந்துரையாடுங்கள். அவர்கள் தேவைகளுக்காக உங்கள் தாய்மொழியில் (தமிழ்) வாழ்த்துங்கள். அந்த வாழ்த்துக்கள்:- நீங்கள் வளமடைய, உங்கள் குடும்பம் வளமடைய, உங்கள் இனம் வளமடைய நீங்கள், உங்கள் தாய்மொழியில் (தமிழ்) ஓதிய மந்திரமாக வினையாற்றும்.