Show all

கேட்டது மணவிலக்கு!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் கே. கஸ்தூரி ரங்கன் தலைமையிலான பொது முன்னெடுப்பு அமைப்பு நாட்டின் சிறந்த ஆட்சி தரும் மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

சமநிலை, வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையிலும், நிர்வாக செயல்திறன், சூழல் குறியீட்டு திறன் ஆகியவற்றின் பின்னணியிலும் இந்தியாவின் சிறப்பான ஆட்சியைத் தரும் மாநிலங்களாக முதல் நான்கு இடங்களை  தென்னாட்டின் மாநிலங்களே கைப்பற்றியுள்ளன. ஆனால் ஒன்றிய ஆட்சி வடக்கின் தலைவர்கள் கையில் இந்தியா எப்படி உருப்படும்?

மருத்துவக் கல்வி மருத்துவக் கல்வி 
என்று ஒரு மனைவி
அடாவடியாய் அவளுக்கு கட்டி வைத்த
கணவன் பெயர் நீட்
சமநிலை, வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை
வளமான ஆட்சிதரும் மாநிலங்கள்
கட்டி வைத்த மருத்துவக் கல்லூகளின் 
பிள்ளை மருத்துவக் கல்வி
சோம்பேறி முட்டாள் அதிகாரத்தின் பிள்ளை
கணவனாய் வந்த நீட்
என் உழைப்பில் நான் சமைத்து 
நீட்டுக்கு எதற்கு உணவு
ஒரு போதும் தரவே மாட்டேன்
பட்டினியாய் சாகட்டும் நீட்
நீட் எனக்கு கணவனாய் வேண்டாம் 
என்று அந்த மனைவி
மணவிலக்கு கேட்டு அறங்கூற்று மன்றம்
போனதில் கிடைத்தது 7.5
நீட்தான் கணவனாம் மணவிலக்கு கிடையாதாம்
ஒதுக்கலாமாம் 7.5 உணவை
சமைத்ததெல்லாம் நீட்டுக்கே என்று இல்லாமல்
7.5 சாப்பிடலாமாம் இவளும்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.