Show all

விழித்தெழுங்கள்!

அரசுப் பள்ளி மாணவர்களே! 
அம்மாணவர்களின் பெற்றோர்களே!
பனிரெண்டு ஆண்டுகள் படிப்படியாய் 
சில நேரங்களில் பேருந்து படிகட்டில் கூட 
கூரை இல்லா கட்டிடத்தில்
பாடம் நடத்தா ஆசிரியர்களிடத்தில்
படித்ததும் பயணித்ததும் எதற்கு?
அரசு மருத்துவக் கல்லூரிகளில் 
ஏழு புள்ளி ஐந்து விழுக்காடு 
பேர்கள் மட்டும் இடம் பிடித்து 
மீதமுள்ளோர் தெருவில் அலையவா?

தனியார் பள்ளியில்
மின் விசிறிக் காற்றில்
சில நேரம் குளிரூட்டி அறையில்
பாதுகாப்பான பயணத்தில்
பார்த்துப் பார்த்துப் 
பாடம் நடத்தும் ஆசிரியர்கள் 
வசதியாகப்; படித்தவர்களுக்கும் 
சொகுசாகப் பயணித்தவர்களுக்கும்
தென்னூற்று ஏழு புள்ளி ஐந்து 
விழுக்காட்டு இடங்களைத் 
தாரை வார்க்கவா?

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 
ஒற்றை இடமும் 
அரசுப் பள்ளிக்கு வேண்டாம்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் 
ஒற்றை இடமும் 
தனியார் பள்ளிக்கு
தரத்; தேவையே இல்லையே.
அரசுப் பள்ளி மாணவர்களே! 
அம்மாணவர்களின் பெற்றோர்களே!
போராடாமல் விடிவு வராது!
போராடுவோம் வெற்றி பெறுவோம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.