புவியில் நீங்கள் தற்போது நிற்கிற இடத்தில் நேர் செங்குத்தாக துளையிடுங்கள். அதாவது புவியைத் துளைத்துக் கொண்டு எதிர்பக்கம் வானம் தெரியும் வரை துளையிடுங்கள். இப்போது அந்தத் துளையில் ஒரு பந்;தைப் போடுங்கள். அந்தப் பந்து துளையின் கடைசி வரை சென்று மீண்டும் திரும்ப வரும். மீண்டும் திரும்பச் சென்றுவிடும். மீண்டும் திரும்ப வரும் மீண்டும் திரும்பச் சென்று விடும். ஆனால் கடந்த முறை வந்த தூரத்திற்கு கொஞ்சம் முன்பாகவே வந்து திரும்பி விடும். இப்படி ஒவ்வொருமுறையும் தூரம் குறைந்து குறைந்து கடைசியில் துளைக்கு நடுப்பகுதியில் நின்று விடும். புவியீர்ப்பு விசையால் இந்த இயக்கம் சாத்தியமாகும். பழைய காலத்து கடிகாரப் பெண்டுலம் இயங்கிய தனிஊசல் விதி இதுதான் புவியைத் துளையிடும் போது நீர், பெட்ரோல், நெருப்புக் குழம்பு எல்லாம் வரும். நீங்கள் போடும் பந்து கருகும் அல்லது உருகும். என்பதையொல்லாம் தாண்டி இதை நீங்கள் முன்னெடுக்க முடியுமானல், ஒரு கொள்கலனை இயக்கும் வகைக்கான பெரிய துளையாகப் போட்டு, அந்தக் கொள்கலனில் ஏறி அமர்ந்து. புவியின் இந்தப் பகுதியிலிருந்து அந்தப் பகுதிக்கு எந்த எரிபொருள் செலவும் இல்லாமல் பலமுறை பயணித்துக்கொண்டே இருக்க முடியும்.