Show all

தமிழன் தனக்கான சொந்த வீட்டையும், தன் இனத்திற்கான சொந்த நாட்டையும் பற்றிட, பாடாற்ற வேண்டியது என்ன? ஏன்

தமிழன் தனக்கான சொந்த வீட்டை அமைப்பதில் பெரும்பாடு படுகிறான். பேரளவினர் மனைவாங்குவதற்கும், அதில் சொந்த வீடமைப்பதற்கும் முன்னெடுப்பது கடன்பெறும் திட்டமே. அந்தக் கடனை அடைப்பதற்குள் உடம்பில் வலு குன்றி விடுகிறது. இமயத்தில் இருந்து குமரிவரை தமிழ், தமிழ்இனத்திற்கு மட்டுமாக இருந்த நாவலந்தேயத்தை முற்றாக இழந்து, சொந்த நாடு இல்லாமல், தமிழ்நாடு என்கிற ஒரு மாநிலத்தில் நிர்வாகம் செலுத்தி வருகிறான் தமிழன். தமிழன் தனக்கான சொந்த வீட்டையும், தன் இனத்திற்கான சொந்த நாட்டையும் பற்றிட, பாடாற்ற வேண்டியது என்ன? ஏன் என்று அலசுவதற்கானது இந்தக் கட்டுரை.

29,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5126:

தமிழ்!
என்னுடைய முதலாவது உடைமை.
என் தாய் தன் குருதியைப் பாலாக்கி என் உடல் வளர்த்தார்.
தன் உயிர்க்காற்றை மொழியாக்கி என்செவிக்கு உணவாக்கி அறிவு தந்தார்.
என்உடலும் என்தமிழும் என் தாய் எனக்குத் தந்த முதல் உடைமைகள். அவைகளே எனக்கு அடிப்படை.
அவைகளே எனக்கு ஆதாரம்.
என்தமிழை!
பாதுகாக்க வேண்டியதும் பெருமைப் படுத்த வேண்டியதுமான கடமை என்னுடைதே.

என்று மிகச்சிறப்பாக வாழ்ந்திருந்தது, நாவலந்தேயம் என்று பெயர் கொண்ட நடப்பு இந்தியாவில், அயல்மொழி எதுவுமோ, அயல் இனம் எதுவுமே இல்லாமல், முழுதாகத் தமிழும் தமிழினமும் மட்டுமே. 

தமிழ்த்தொடராண்டு 1400ல் வட நாவலந்தேயத்தில் ஆடை நாகரிகம் அறியாத பிராமணர் நுழைந்தது தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக முதல் உடைமைகளான 1.சொந்த உடலின் மீதான பெருமை, 2.தமிழ் குறித்த முனைப்பு தமிழினத்தில் பேரளவினருக்கு குறைந்து கொண்டே வந்தது.

பிராமணரின் மஞ்சள் நிறத்தில் மலைத்த தமிழர்கள் கொஞ்சம். 

பிராமணர் கொண்டுவந்த வெறுமனே பேச்சு மொழியான முந்தை பாஷ்துவின் மீது ஈர்ப்பு கொண்ட தமிழர்கள் கொஞ்சம். 

இந்த ஈர்ப்புகள் காரணமாக, வெறுமனே ஆண் கூட்டமாக வந்திருந்த பிராமணர்களால், தமிழ்பெண்களோடு களவும் கற்பும் பேண முடிந்தது, தமிழ் அடிப்படையில் 

பிராமண இனத்தில் ஆண்கள் மட்டுமே பிராமணர்கள், பெண்கள் வட நாவலந்தேயத்திற்கு அவர்கள் வந்தது தொடங்கி இன்று வரை தமிழினத்தின் வேராக.

இதை நடப்பு மரபணு சோதனைகள் உறுதிப்படுத்துகின்றன என்பது தனிக்கட்டுரையாக வடிக்க வேண்டிய பெரும்செய்தி ஆகும்.

அடுத்து, நம் தமிழைப் பார்த்து, அவர்கள் முன்னெடுத்த பிராகிருதத்தின் மீதும் சிலருக்கு ஈர்ப்பு. 

நம் தமிழைப் பார்த்து, அவர்கள் முன்னெடுத்த சமஸ்கிருதத்தின்  மீதும் சிலருக்கு ஈர்ப்பு.  

நம் இயல்கணக்கில் நிறுவப்பட்ட தெய்வங்களைப் பார்த்து பிராமணியர் தனக்காக உருவாக்கிக் கொண்ட தெய்வங்கள் மீதும் சிலருக்கு ஈர்ப்பு

அகன் ஐந்திணை, குறித்த அகவைத் திருமணம் போன்ற தமிழினக் கட்டுமானங்களுக்கு மாறுபட்ட காமசாஸ்திரம் கொக்கோகம் போன்ற பாலியல் கல்வி மீது பேரீர்ப்பு சிலருக்கு.

பிராமணர்களுக்கு அடுத்து அடுத்து வந்த அராபியம், ஐரோப்பியம், உலக மதங்கள், மார்க்சியம், ஐரோப்பிய இயல்அறிவு (சயின்ஸ்) திராவிடம் ஆகியவைகளும் கொஞ்சம் தமிழர்களால் மலைக்கப்பட்டே வந்தன. 

நடப்பில், இந்தியாவில், அரசியல் அமைப்புச் சட்டம் அட்டவணை எட்டில், பட்டியல் இடப்பட்டுள்ள பதினெட்டுக்கு மேலான மொழிகளும் மொழியினங்களும் இந்த வகை ஈர்ப்புகளால் தமிழில் இருந்து வெளியேறியவர்களால் உருவானது ஆகும்.

இன்றும் தமிழினத்தின் முதலாவது உடைமை ஆன தமிழனின் நிறமும், தமிழும் இருந்து கொண்டிருப்பது இந்த இரண்டிலும் இருந்து கொண்டிருப்பவர்களால் மட்டுமே.

இப்படி தமிழின் நிறம், தமிழ் இந்த இரண்டிலும் இருந்து கொண்டிருக்கிற அவர்களிலும் சிற்றளவினர் தங்கள் பிள்ளைகளுக்குச் சமஸ்கிருதப் பெயர் சூட்டி தங்கள் முதலாவது உடைமை ஆன தமிழை இழந்து வருகிறார்கள்.

இப்படி தமிழின் நிறம், தமிழ் இந்த இரண்டிலும் இருந்து கொண்டிருக்கிற அவர்களிலும் சிற்றளவினர் தங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கிவழிக்கல்வி, ஒன்றிய பாடத்திட்டக் கல்வி ஆகியவற்றைக் கொடுத்து தமிழின் நிறம் சார்ந்தவை என்பவைகளான தனித்திறன், வேளாண்மை, சொந்தத் தொழில், வணிகம் ஆகியவற்றை இழந்து அயல் நிறத்தின் கீழாக உடலுழைப்புக் கூலித்தளத்திற்கும் நிருவாகக் கூலித்தளத்திற்கும் முயற்று வருகிறார்கள்.

1.பெயரடையாளம்
2.குடும்பம்
3.வீடு
4.கல்வி 
5.கலை 
6.இலக்கியம்
7.தொழில் 
8.கருவிகள்
9.உடை,அணிகலன் 
10.உணவுகள்
11.வணிகம்
12.நாடு
13.அரசு 
14.நீராதாரம்
15.கோயில்
16.நிதி
17.நீதி
18.பாதுகாப்பு 
19.பண்பாடு
20.வரலாறு
ஆகியவற்றில் எல்லாம் உடைமையை இழந்து அயலவர்தமக்கு உடலுழைப்பு மற்றும் நிருவாகக் கூலிகளாகப் பாடாற்றி வருகிறார்கள்.

இதனால் தமிழினம் கடவுளிடமும் தங்கள் சொந்த இடத்தை இழந்து வாடகை கொடுத்துக் கொண்டு வருகிறது. 

தமிழ்ப் பெயரடையாளத்தை துறந்து அயல்மொழி அடையாளத்தில் உலா வருகிற பலரும் பல வகையில் தங்கள் முன்னோரின் பல உடைமைகளை பல ஆயிரம் ஆண்டுகளாக இழந்து கொண்டிருக்கும் வகைக்கே கடவுளும் நம்மை முயக்கி வருகிறது என்பதை பற்பல சான்றுகள் நமக்கு உணர்த்துகின்றன.

1. தமிழ்நாடு என்கிற பெயர் மாற்றத்திற்கு முதலாவதாக முனைந்தவர் சங்கரலிங்கனார். 76 நாட்கள் உண்ணாநிலை மேற்கொண்டு உயிரிழந்தாரே அன்றி தமிழ்நாடு பெயர் மாற்றத்தை வென்றெடுக்க முடியவில்லை. காரணம் அவரின் பெயர் தமிழ்அல்ல.
2. அப்போது சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த காமராஜராலும் அந்தப் பெயர் மாற்றத்தைப் பெற்றுத்தர முடியவில்லை. காரணம் அவரின் பெயர் தமிழ்அல்ல.
3. தமிழ்நாடு என்கிற பெயர் மாற்றத்தை வென்றெடுத்தவர் அண்ணாதுரை அவர்கள். காரணம் அவரின் பெயர் தமிழ்!
4. சல்லிக்கட்டுப் போராட்டத்தின் தீர்வாக சல்லிக்கட்டு உரிமையை வெற்றெடுத்தவர் அப்போது தமிழ்நாடு முதல்வராக இருந்த பன்னீர் செல்வம். காரணம் அவரின் பெயர் தமிழ்!
5. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று தமிழ்நாடு மருத்துவக் கல்வி உரிமையை வெற்றெடுப்போம் என்று உறுதியளித்து தமிழ்நாடு முதல்வர் ஆன ஸ்டாலின் அவர்களால் இன்னும் அதைச் சாத்தியப்படுத்த முடியவில்லை. காரணம் அவரின் பெயர் தமிழ்அல்ல.
6. அண்ணா திமுகவை தனதாக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் ஜானகியால் முடியவில்லை. காரணம் அவரின் பெயர் தமிழ்அல்ல. ஜெயலலிதாவல் முடிந்தது. காரணம் அவரின் பெயர் தன்இனமொழியான சமஸ்கிருதம்.
7. ஜெயலலிதா அவர்கள் இறப்பிற்கு பின், அண்ணா திமுகவை தனதாக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் சசிகலா, தினகரன், பழனிசாமி, பன்னீர் செல்வம். சசிகலா மற்றும் தினகரனால் முடியவில்லை. காரணம் அவர்கள் இருவரின் பெயர்களும் தமிழ்அல்ல. பழனிச்சாமி, பன்னீர்செல்வம் என்கிற தமிழ்ப்பெயர் கொண்ட இருவரில் ஒருவரான பழனிச்சாமியால் முடிந்தது. 
8. பல ஆண்டு காலம் மிகச்சிறப்பாகப் போராடியும் தமிழீழத்தை பிரபாகரனால் மீட்க முடியவில்லை. காரணம் அவரின் பெயர் தமிழ்அல்ல.
9. தமிழ்நாட்டின் பணக்காரர்களில் முதலாவராக உலா வருகிறார் சிவன் நாடார். காரணம் அவரின் பெயர் தமிழ்!
10. கூகுள் நிறுவனத்தின் தலைவராக உரிமைத்தளத்தில் அறியப்படுகிற சுந்தர் பிச்சை உடைமை தளம் எதிலும் முதன்மைப்பற்ற முடியவில்லை. காரணம் அவரின் பெயர் தமிழ்அல்ல.

எடுத்துக்காட்டுக்கே இந்த பத்து சான்றுகள். தமிழ்ப்பெயர் சூட்டியவர்களால் மட்டுமே கடவுளில் சொந்த இடத்தை நிறுவி, முன்னோர் விட்டுச்செல்லும் சொத்துக்களைக் காப்பாற்ற முடியும் என்றும் தங்கள் முயற்சியில் எளிதாக சொந்த வீடு, தனித்திறன், வேளாண்மை, தொழில், வணிக முயற்சியில் சாதிக்க முடியும் என்று புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் தமிழினம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,038.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.