எந்த மதம் உண்மையின் அடிப்படையிலானது என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்? என்று வேறொரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு, 'எல்லா மதங்களும் கடவுளிடம் கேட்டு தங்களுக்கு ஒப்புக் கொடுத்தவர்களுக்கு பெற்றுத்தருவது' என்கிற ஒரே அடிப்படைக்குச் சொந்தமானவைகள் என்கிற விடையளிப்புக்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. 10,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5125. கடவுளிடம் நீங்களே நேரடியாகக் கேட்டுப்பெற முடியும் என்று தமிழ்முன்னோர் தெளிவாக நிறுவியுள்ளனர். வழிகாட்டியால்தான், பின்பற்றுகிறவருக்கு, கடவுளிடம் இருந்து தேவையானவைகளைப் பெற்றுத் தரமுடியும் என்று பல்வேறு மதங்களை கட்டமைத்துள்ளனர் உலகினர். கடவுள் கேட்டதைக் கொடுப்பதற்கானது என்று தமிழ்முன்னோர் தெளிவாக நிறுவியுள்ள நிலையில் இரண்டும் சரிதாம். வழிகாட்டிகள் அல்லது மதங்களுக்கு உங்களை ஒப்புக் கொடுத்து அவர்கள் மூலமாக நீங்கள் கடவுளிடம் இருந்து தேவையானவைகளைப் பெறும்போது கடவுளிடம் உங்களுக்கான இடம் இல்லை. வழிகாட்டிகள் அல்லது மதங்களின் கடவுள் இடத்திற்கு, நீங்கள் ஒரு வாடகை கொடுக்கின்றீர்கள். அந்த இடத்தில் உங்கள் பிள்ளைகள் பயணிக்க அவர்களும் கட்டாயம் ஒப்புக் கொடுக்கவும் வாடகை கொடுக்கவும் வேண்டும். அந்தந்த மதத்தை அந்தந்த மத வழிகாட்டிகள் இயக்குகிறார்கள். நீங்கள் எந்த மதத்திலும்; இருக்கலாம். நீங்கள் இருக்கும் மதமே சிறந்தது என்று ஒப்புக் கொடுக்கிற போதுதாம், அந்த மதத்தின், வழிகாட்டிகளின் உங்களுக்கான கேட்பும்- உங்கள் ஊக்கமும்- நேர்கோட்டில் அமைய, கடவுள் உங்களுக்;குச் சிறப்பான பலனைத் தரமுடியும். எந்த மதம் சிறந்தது என்று சிந்திக்கிறவன்- அவன் சிந்தனையில் வருகிற அனைத்து மதங்களும் நிறுவியுள்ள கடவுள் இடத்திற்கு- கட்டாயம் ஒரு வாடகை கொடுக்க வேண்டியிருக்கும். ஹிந்து மதத்திற்கு எதிர்நிலை பேணும் திராவிட இயக்கங்கள் அனைத்தும், ஹிந்து மதத்திற்கு ஒரு வாடகை கொடுத்துக் கொண்டிருக்கின்றன என்பது வரலாற்றுத் தரவுகள் அல்லவா!
கடவுளிடம் நீங்கள் நேரடியாகக் கேட்டுப்பெறுவதில் கடவுளில் உங்களுக்கு சொந்தமான இடம் இருக்கிறது. அந்த இடத்தில் உங்கள் எச்சங்களும் சிறப்பாக பயணிக்க முடியும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,809.