Show all

மனிதனைப் போல விலங்குகளும் சிந்திக்கத் தொடங்கினால் நம் நிலைமை என்னவாகும்?

மனிதனைப் போல விலங்குகளும் சிந்திக்கத் தொடங்கினால் நம் நிலைமை என்னவாகும்? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்ட வினாவிற்கு, விலங்குகளுக்கும் மனம் மூளை சிந்தனை எல்லாம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. என்பதைத் தெளிவுபடுத்தி, விளக்கும் நோக்கத்திற்கானது இந்தக் கட்டுரை.

01,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5126:

விலங்குகளுக்கும் மனம் மூளை சிந்தனை எல்லாம் இருக்கிறது. அது நிகழ்காலத்திற்கான சிந்தனை மட்டுமே. உணவுத்தேடல், மறுபிறப்பு நோக்கம், எதிரியை வீழ்த்துதல் ஆகியவற்றுக்கு அது பயன்பட்டே வருகிறது.

விலங்குகளின் எதிரியை வீழ்த்தல் தலைப்பில், மனிதனும் பாதிக்கவும், பாதிக்காமல் தப்பிக்கவும், பாதுகாத்துக் கொள்ளவும் பாடாற்றிக் கொண்டுதான் இருக்கிறான். 

மூளையில், மனத்தில் அறிவுப் பதிவுகளைத் தெளிவாகக் குவிப்பதற்கான மொழியும், மொழிவளர்ச்சியும், மந்திரமும் விலங்குகளுக்கு இல்லை. 

மந்திரம் என்பது மனத்தில் குவிக்கும் அற்றல். ஆகவே மந்திரம், நேற்று இன்று நாளை என்று முக்காலத்திற்குமான சி;ந்தனை.

மனிதனிடம், மொழி, மொழிவளர்ச்சி, மந்திரம் என்கிற அந்த மூன்றும் இருக்கிறது. 

விலங்குகளிடம் இருக்கும் நிகழ்காலத்திற்கு மட்டுமான சிந்தனையால் நாம் சிக்கலை எதிர்கொண்டுதான் வருகிறோம். 

மனிதனுக்கு இடையிலும் நிகழ்காலச் சிந்தனைச்சிக்கல் இருந்து கொண்டுதான் இருக்கிறது. 

மனிதனில் பெருந்துன்பம் ஆகிவிடுகிற சிக்கல்களுக்கு, யார் பெரியவன் எது பெரியது என்கிற அகந்தைதான் காரணம்.

இந்த அகந்தை, அடிப்படையான மூன்று கோட்பாடுகளைத் தருகிறது.

1. பெரியோரை வியத்தலும் இல்லை, சிறியோரை இகழ்தலும் இல்லை என்கிற வகைப்பாட்டுக் கோட்பாடு
2. பெரும்பான்மைக்கே, ஆட்சி அதிகாரம் என்கிற பாகுபாட்டுக் கோட்பாடு.
3. பெரும்பான்மையோடு ஒத்துழைத்திருக்க சில பல உரிமைகளை நிர்பந்திக்கிற முரண்பாட்டுக் கோட்பாடு.

1. தமிழினம், சிலபல இனங்களில் தனிமனிதர்கள், தனிஅடையாளமாக அம்மாக்கள், ஆகியோர் வகைப்பாட்டுத்தளத்தில் இயங்குகின்றனர்.

2. பிராமணியம், உலக மதங்கள், கார்ப்பரேட்டுகள் சிலபல தனிமனிதர்கள், தனிஅடையாளமாக அப்பாக்கள், பாகுபாட்டுத் தளத்தில் இயங்குகின்றனர்.

3. உலக மதங்கள் மற்றும் கார்ப்பரேட்டுகளில் உரிமை கோருவனவாக மார்க்சியம், பிராமணியர்களிடம் உரிமை கோரும் தளத்தில் திரவிட இயக்கங்கள், சமுகத்தில் உரிமை கோரி போராடுகிற சிலபல மனிதர்கள், தனிஅடையாளமாக பிள்ளைகள் முரண்பாட்டுத்தளத்தில் இயங்குகின்றனர்.

பேரளவான மக்கள் விலங்குகள் போல, அகந்தை ஏதும் இல்லாமல், நிகழ்காலச் சிந்தனையில் மட்டுமே இயங்கி வருகிறார்கள். 

பல நாடுகளில் பாகுபாடுகளைப் பேணும் பேரினங்கள் ஆட்சியில் இருப்பதுதான் உலகச் சிக்கலாகவும் போராட்டங்களாகவும், போர்களாகவும் தொடர்கின்றன.

இந்தியாவில் பேரளவு மக்கள் ஏற்றதாழ்வுகளால் பாதிப்பதற்கும், திராவிட இயக்கங்கள் முரண்பாட்டை தூக்கிப்பிடிக்கும் பாடாற்றலுக்கும் காரணம், நேற்றைய காங்கிரசும் இன்றைய பாஜகாவும் பிராமணியத்தை ஆட்சி அதிகாரப்படுத்துவதுதான். 

விலங்குகள் முக்காலச் சிந்தைனைக்கு வந்து, அகந்தையில் பாகுபாட்டைத் தூக்கிப் பிடித்தாலும், பேரளவான மக்கள் விலங்குகள் போல அகந்தை ஏதும் இல்லாமல், நிகழ்காலச் சிந்தனையில் மட்டுமே இயங்கி வருவார்கள். 

மார்க்சியம், திராவிடம் போன்ற முரண்பாடுகள் விலங்குகளிடமும் எழுந்தும், தமிழினம் போல வகைப்பாட்டைக் கொண்டாடும் விலங்கினங்களும் அமைந்து, இன்றுபோலவேதான் அன்றும் உலகம் இருக்கும். உங்கள் வினா வியக்கிற மாதிரியான மாற்றம் எல்லாம் வராது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,165. 
 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.