Show all

தேவன், தெய்வம், கடவுள், இறை, ஆண்டவன், சாமி மற்றும் கர்த்தர் ஆகிய சொற்களின் வரையறை என்ன?

தேவன், தெய்வம், கடவுள், இறை, ஆண்டவன், சாமி மற்றும் கர்த்தர் ஆகிய சொற்களின் வரையறை என்ன? இவைகள் ஒன்றுக்கொன்று வேறுபடுகிறதா? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

11,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5125. 

கடவுள், இறை, தெய்வம் மூன்றும் பொருள் பொதிந்த தமிழ்ச்சொற்கள்.
கடவுளும் இறையும் ஆற்றல் மூலங்கள்.
தெய்வம் வழிபாட்டு மூலம்.
கடவுள் ஒன்று.
இறை நான்கு.
தெய்வங்கள் பல.
கடவுள்- வெளி, விண்வெளி, விசும்பு என்று மூன்;று நிலைகளில் இயங்கும்.
இறை நான்கு: நிலம், நீர், தீ, காற்று என்பன.
இறை- தனிஒன்றுகள் தொடங்கி நீங்கள் நான் வரை அனைத்து தான்தோன்றி இயக்கத்திலும் பங்குபெறும்.
அயலவர்கள் வரவுக்குப் பின்பாக:
தேவன்- தெய்வம் என்கிற தமிழ்ச்சொல்லின் பொருள் புரிந்து கொள்ள முயலாமல், இடுகுறியாக மொழியாக்கம் செய்து கொள்ளப்பட்ட சமஸ்கிருதம்.
ஆண்டவன்- தெய்வத்தை முரண்பாடாகப் புரிந்து கொண்டு தொடர் ஆதிக்கம் உடையதாக கட்டமைக்கப்பட்ட பிற்காலத் தமிழ்ச்சொல்.
சாமி- தெய்வத்தை பாகுபாடாகப் புரிந்து கொண்டு அதற்கு அடிமைப்பட்டிருக்க வேண்டும் என்கிற கருத்தியலில் கட்டமைக்கபட்ட பிற்காலத் தமிழ்ச்சொல்.
கர்த்தர்- கடவுளைப் படைப்பு மூலமாக கருதும் அயலியல் அடிப்படையில், ஐரோப்பியம் கொண்டாடும் சமஸ்கிருதச் சொல்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,810.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.