வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய சிறப்பான ஐந்து வழிகள் என்னனென்ன? என்று என்னிடம் வேறு ஒரு தளத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டதே இந்தக் கட்டுரை. 17,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய சிறப்பான ஐந்து வழிகள் என்னனென்ன என்கிற வினாவிற்குக் கிடைக்கும் இந்த விடை: தமிழ்முன்னோர் முன்னெடுத்த மூன்றாவது முன்னேற்றக்கலையான மந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டது ஆகும். 1. உலகமொழிகளில் தமிழ் மட்டுமே கொண்டிருக்கிற கடவுள் என்கிற சொல்லின் விளக்கத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். கடவுள் குறித்த தெளிவான விளக்கத்தை இந்த இணைப்பில்: http://www.news.mowval.in/Editorial/katturai/Kadavul-144.html சென்று படித்தறியலாம். 2. நாம் பிறந்ததிலிருந்து இந்த வினாழிகை வரை நாம் பெற்ற வெற்றிகள் குறித்த பட்டியல் நம்மிடம் எப்போதும் இருக்க வேண்டும். 3. உங்கள் தலையெழுத்தை நீங்கள்தாம் எழுதிக் கொள்கின்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 4. உங்களைப் போலவே அவரவரால்தாம் அவரவர் தலையெழுத்து எழுதிக் கொள்ளப்படுகிறது என்கிற நிலையில் கடவுளிடம் உங்கள் கேட்புகள் கமுக்கம் காக்கப்பட வேண்டும். 5. உங்களைப் போலவே அவரவரால்தாம் அவரவர் தலையெழுத்து எழுதிக் கொள்ளப்படுகிறது என்கிற நிலையில் கடவுளிடம் உங்கள் கேட்புகளுக்கு காலம் நிர்பந்திக்க முடியாது என்பதை புரிந்து கொண்டு, உங்கள் கேட்பு நிறைவேறும் வரை ஊக்கத்தைக் கைவிடாமல் இருக்க வேண்டும். இந்த ஐந்து விடைகளுக்கு விளக்கவுரை அளிக்கிற மந்திரம் அறிவோம் நூலை இந்த இணைப்பில்: https://amzn.to/3CfQWQJ சென்று படிக்க முயல்வதோ, நூலை விலைக்கு வாங்கி உங்கள் மின்நூலகத்தில் வைத்துக் கொள்வதே உங்கள் விருப்பம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,480.