நமது நாட்டில் அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக வாழ, தமிழ்ச்சான்றோர்கள் தமிழ்க்குடும்பத்தை போன்றதான சமுகத்தை கட்டமைக்க விழித்தெழவேண்டும் என்பது விடை. அதன் விளக்கமே இந்தக் கட்டுரை. 08,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: பெரும்பாலான குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றன. மகிழ்ச்சியில்லாத குடும்பம் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் சமூக அமைப்பு. திருமணம் என்ற தலைப்பில் தலைவியையும், தலைவனையும் குடும்பமாக இணைத்து வைக்கின்றன இரண்டு குடும்பங்கள். வினையே ஆடவர்க்கு உயிரே என்று தமிழ்க்குடும்பம் தலைவனுக்கு பொருள் இயற்றும் கடமையை கற்பித்திருக்கிறது. பொருள் ஈட்டும் கடமையை எல்லாக் குடும்பத்திலும் தலைவன் சிறப்பாகச் செய்து வருகின்றான். தலைவி குடும்பத்தில் இருந்து பாடாற்றி வருகின்றாள். மகிழ்ச்சியான குடும்பத்தில் மேலும் மகிழ்ச்சியூட்ட பிள்ளைப்பேறு அமைகிறது. குழந்தைக்குத் தன் இரத்தத்தைப் பாலாக்கி உணவூட்டுகிறாள் தாய். தன் மூச்சுக்காற்றால் உங்கு உங்கு என்று தாய்மொழியையும் பயிற்றுவிக்கிறாள் தாய். பிள்ளை பள்ளிப் பருவம் எய்தியதும் கல்வி பயிற்றுவிக்கின்றனர் பெற்றோர். பிள்ளை ஆணாக இருந்தால், வினையே ஆடவர்க்கு உயிரே என்று தமிழ்க்குடும்பம் தலைவனுக்கு கற்பித்திருக்கிற பொருள் இயற்றும் கடமையை அவனுக்குக் கற்பிக்கின்றது. பெண்ணாக இருந்தால் தாய்மையின் பெருமையைப் பயிற்றுவிக்கின்றனர் பெற்றோர். திருமண அகவை எய்தியதும் ஆணாக இருந்தால் அவனுக்கு ஒரு பெண்ணை மணமுடித்து அழைத்து வந்து அவனின் தனிக் குடும்பத்தை உருவாக்கித் தருகின்றனர். திருமண அகவை எய்தியதும் பெண்ணாக இருந்தால் ஒரு ஆணுக்கு மணமுடித்து அவனோடு புதுக் குடும்பத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். ஒவ்வொரு பெண்ணின் முதல் குழந்தைப்பேற்றை தாய்வீட்டில் நடத்தும் கடமையை தமிழ்க்குடும்பம் கற்பித்திருக்கிறது. இடையில் தொழில் வணிகம் ‘விழா’மல் இருப்பதற்கு ‘விழா’க்களை கற்பித்திருக்கின்றது தமிழ்க்குடும்பம். விழாக்களால் வணிகமும் உற்பத்தியும் செழிக்கின்றன. பெயர் சூட்டு விழா, பிறந்த நாள் விழா, காதணி விழா, பூப்பு நன்னீராட்டு விழா, பள்ளிக்கு அனுப்புதல் விழா, தொழில் நிறுவுதல் விழா, மொய்த் திருவிழா, திருமணவிழா, வளைகாப்பு விழா என்று குடும்பம் மகிழ்ச்சியை பலவாறு கொண்டாடுகிறது. இத்தனையையும் ஒவ்வொரு குடும்பமும் தங்கள் தொழிற் கடமையின் மூலமாக நிறைவேற்றுகிறது. இதற்கிடையில் உழைப்பு எளிமைக்காக, குடும்பங்களை ஒருங்கிணைத்து பெரிய குடும்பமாகக் கட்டமைக்கப் படுகிற சமூக அமைப்பு, மாதிரிக் குடும்பமாக ஒவ்வொரு உறுப்புகளுக்கும் கடமை கற்பிக்கப்படாமலும், கற்பிக்கப் பட்டிருந்தாலும் பொய்யோடும் வலுவோடும், உழைப்பிற்கும் நிருவாகத்திற்கும் இடையே ஏற்றதாழ்வு முன்னெடுக்கப் படுவதால், ஏற்றதாழ்வில் பாதிக்கப் படுகிற குடும்பங்கள் மகிழ்ச்சியில்லாத குடும்பமாக உருமாற சமூக அமைப்பு காரணமாக அமைகிறது. நம் பழந்தமிழ்ச் சமூகத்தில் தாய்மொழி சிறப்பாக மதிக்கப்பட்டது. தமிழ்! என்னுடைய முதலாவது உடைமை. என் தாய் தன் இரத்தத்தை பாலாக்கி என் உடல் வளர்த்தார். தன் உயிர்க்காற்றை மொழியாக்கி என்செவிக்கு உணவாக்கி அறிவு தந்தார். அரசு அறிஞர் மக்கள் என்று மூன்று உறுப்புகளுக்கும் செவ்வனே கடமை வகுக்கப்பட்டிருந்தன. மக்கள் உழைப்பிலும், அறிஞர் உழைப்பை மையப்படுத்திய நிருவாகத்திலும், அரசு உழைப்பையும் நிருவாகத்தையும் சமமாகப் பேணுகிற அதிகாரத்தையும் கொண்டிருந்து. மூன்று உறுப்புகளும் செவ்வனே கடமையாற்றின. தொல்காப்பியமும், திருக்குறளும், சிலப்பதிகாரமும், பத்துப்பாட்டும், எட்டுத் தொகையும் அதை பறைசாற்றின. நம்மோடு அயல் இனமும், அயல் மொழியும் கலந்த போதுதாம் உழைப்புக்கும், நிருவாகத்திற்கும் ஏற்றதாழ்வு கற்பிக்கப்பட்ட அதிகாரத்தை முன்னெடுத்தது அரசு. அன்னியர் படையெடுப்புகள், ஆங்கிலேயர் வணிக வரவு, அனைத்திலிருந்தும் விடுதலை என்பதாக காங்கிரசின் ஹிந்தி மோலதிக்கம், தற்போது பாஜகவின் ஹிந்தி மற்றும் ஹிந்துத்துவா மேலாதிக்கம் என்பதாகத் தொடரும் நிலையில்- குடும்பம் போலவே பெரிய குடும்பமான எந்த அரசும் தொழில் செய்தே நாட்டையும் நிருவகிக்க முடியும். மக்களிடம் எளிமையாகப் பெறும் வரிகள் மூலம் நாட்டை நிருவகிக்கும் வாய்ப்பின் காரணமாகத்தான் எல்லோரும் ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறார்கள். அரசுக்கு சாராயக்கடை நடத்தும் வாய்ப்பும் இருப்பதால், எதற்கும் கையாலாகாதவர்களும் கூட போட்டியில் இணைந்து கொள்கிறார்கள். வரிகளைப் பெறுவதற்கான துறைகள் அனைத்தும் மறுஉற்பத்தி சாராத இழப்பு மட்டுமே என்கிற ஒருவழிப் பாதையாகி மக்களின் உழைப்பு ஏராளமாக வீணடிக்கப் படுகிறது. உழைக்கும் மக்களுக்கு வரி ஏய்பாளர்கள் என்று பட்டம். தண்டிப்பதற்கு அறங்கூற்றுமன்றங்கள். வரி என்ற பெயரில் உழைப்பைச் சுரண்டுவது குற்றமா? உழைப்புச் சுரண்டலுக்கு உட்பட மறுப்பது குற்றமா? போகாத ஊருக்கு நான் வழி சொல்லவில்லை. என் தமிழ்க்குடும்பம் பத்தாயிரத்திற்கு மேலான ஆண்டுகளாகப் பயணித்துக் கொண்டிருக்கிற வழியைதான் காட்டுகிறேன். தமிழ்க்குடும்பம் தம்மையும் காத்துக் கொண்டு தம்மைப் பிணைத்துள்ள அயல்சட்ட சமுகத்திற்கு வரியும்செலுத்திக் கொண்டுதானே பயணித்துக் கொண்டிருக்கிறது. ஒரு நாட்டில்
என்உடலும் என்தமிழும் என் தாய் எனக்குத் தந்த முதல் உடைமைகள். அவைகளே எனக்கு அடிப்படை. அவைகளே எனக்கு ஆதாரம்.
என்தமிழ்! என்தாய் எனக்கு தந்த முதல் உடைமை என்பதே எனக்குப் பெருமை. என்தமிழை! எந்த இன்னொரு மொழியோடும் வைத்து ஒப்பிடத் தேவையில்லை.
என்தமிழை! பாதுகாக்க வேண்டியதும் பெருமைப் படுத்த வேண்டியதுமான கடமை என்னுடைதே. தாய்மொழி! வெறுமனே கருத்துப் பறிமாற்றக் கருவியன்று. அதுவே என் அறிவின் மூலம். அடுத்த மொழிகள் எத்தனை கற்றாலும் அவைகள் கருவிகள் மட்டுமே. தமிழ் உயர்வானது! தமிழ் பழமையானது! தமிழ் வளமையானது! தமிழ் செம்மையானது! என்பதெல்லாம் நிற்காது. தமிழ் என்தாய் எனக்குத் தந்த முதல் உடைமை என்பது ஒன்றே நிற்கும் என்பதாக.
நமது நாட்டில் அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக வாழ, தமிழ்ச்சான்றோர்கள் தமிழ்க்குடும்பத்தை போன்றதான சமுகத்தை கட்டமைக்க விழித்தெழவேண்டும்.