இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னமே தொல்பொருள் ஆய்வு முயற்சியில் கண்டறிப்பட்ட 'கி.மு 3000க்கும் கி.மு 2500 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த சிந்துவெளிநாகரிகம் தொட்டு, தெற்கே குமரிக்கடல் வரையிலுமான மண்ணில் வாழ்ந்த அறிவார்ந்த மக்களினத்தின் மொழியான தமிழின் சிறப்பு குறித்து பேசுவதற்கானது இந்தக் கட்டுரை. 26,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5125: இயற்கையின் அத்தனை ஓசைகளையும் எழுதிட, உலகின் எல்லா மொழிகளும் தலைப்பட்டத்தன் காரணமாகவே, உலக மொழிகளுக்கு எழுத்துக்கள் கிடைத்தன. அந்த எழுத்துக்கள் மூன்று வகையின. ஓவிய எழுத்து என்பது ஒவ்வொரு சொல்லையும் படங்களாக எழுதுவது ஆகும். சீனா. சப்பான் கொரியா இந்த முறையில் எழுதிக்கொண்டுள்ளன. சீன மொழியை எழுத 3000 லிருந்து 4000 எழுத்துக்களைக் கற்றிருக்க வேண்டும். ஆங்கில எழுத்துமுறை குறித்து, பேரளவான தமிழ்மக்கள் நன்றாகவே அறிவார்கள். 26 ஆங்கில எழுத்துக்களைக் கற்றுவிட்டால் போதாது. ஒவ்வொரு ஆங்கில சொல்லுக்கும் ஸ்பெல்லிங் என்கிற எழுத்துக்களை ஒரே ஒரு முறையாவது கற்றே ஆக வேண்டும். எஸ்யுஎன் என்றால் ஞாயிறு என்றும் எஸ்ஓஎன் என்றால் மகன் என்றும் ஒவ்வொரு ஆங்கில சொல்லுக்கான எழுத்தை நினைவில் நிறுத்தியாக வேண்டும். இந்த வகையான ஆங்கில முறை எழுத்தையே உலகின் பேரளவான மொழிகள் கொண்டுள்ளன. அரபு, உருது, பாரசீகம், பாஷ்டே, ஹீப்ரு, போன்ற மொழிகள் ஆங்கில முறை எழுத்தையே கொண்டிருந்தாலும் வலமிருந்து இடமாக எழுதும் அமைப்பைக் கொண்டுள்ளன. ஒலியன் எழுத்து முறையில் எழுத்துக்களை உருவாக்கியும் அதற்கு மாத்திரை அளவை கற்பித்தும் எழுத்தை கூட்டி ஒலித்தாலே சொல் வரும் வகைக்கு எழுத்துக்களை உருவாக்கிக் கொண்ட உலகின் ஒற்றை மொழி தமிழ் மட்டுமே. எந்தச் தமிழ்ச்சொல்லையும் தமிழ் எழுத்தைக் கற்ற யாரும் எளிமையாக எழுதிவிட முடியும். இதற்கான காரணம்: உலகின் எந்த மொழித்தொடர்பும் இல்லாமல், சொந்த மொழியாக, உடலசைவு மொழி மற்றும் விளையாட்டு ஆன நாடகத்தமிழ், நெட்டோசை, அளபெடை உள்ளிட்ட இசைதமிழ், இயற்கையின் இயல்புகளைக் இயல்கணிப்பாகவும், இயல்அறிவாகவும் கற்றுத் தேர்ந்த இயற்றமிழ் என தமிழ்மொழி படிப்படியாக வளர்ந்ததே ஆகும். உலகினர் தங்கள் மொழியில் இயல்அறிவை (சயின்ஸ்) மட்டுமே உருவாக்கிக் கொண்டாடி வரும் நிலையில், தமிழோ இயற்றமிழில் இயல்அறிவை உருவாக்கி ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே சிந்துவெளியில் முன்னெடுத்த நுட்பமான நகரக் கட்டுமானங்கள் கொண்ட இனமாகவும், உலகின் முதல் அணைக்கட்டுக்கு சொந்தமான இனமாகவும், உலகின் முதல் கடலோடி இனமாகவும் விளங்கும் தமிழினம் இயல் கணிப்பு என்கிற ஒரு பகுதியையும் உருவாக்கி மனிதத் தோற்றம், உயிர், மெய், ஆறறிவு போன்றவைகளையெல்லாம் சிந்தித்தது. அந்த வகையாக தன் மொழியின் எழுத்துக்களையே உயிர் என்றும் மெய் என்றும் வகைபடுத்தியது. உயிர் பனிரெண்டு மெய் பதினெட்டு என தமிழின் முதல் எழுத்துக்கள் முப்பது எனக் கட்டமைத்தது. தமிழ் எழுத்துக்கள் காலத்திற்கு காலம் மாறுபட்ட எழுத்து வடிவங்களை முன்னெடுக்க, நாகரிகத் தொடர்ச்சியும், அயல்வரவும் பெருங்காரணமாக அமைந்தது. வட நாவலந்தேயத்து சிந்துவெளி தொட்டு குமரிவரையிலான, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இடைச்சங்க கால தமிழ் எழுத்துமுறையும் உயிர் மெய் என முப்பது எழுத்துக்களையே கொண்டிருந்தது. அந்த எழுத்துக்கள் இந்தியா முழுவதும் கிடைக்கபெற்ற தொல்பொருள் மற்றும் கல்வெட்டுகளில் காணப்பெறுகின்றன. அயலவர் வரவிற்கு பின்பு அவர்களும் தங்கள் மொழிகளுக்கு தமிழையொட்டி எழுத்துக்கள் அமைக்க, அவைகளில் இருந்து பிரித்து அறியப்பட்ட, சங்ககால தமிழ் எழுத்து வரிவடிவம் வட்டெழுத்து, தமிழ்ப்பிராமி, தமிழி என்று பல்வேறு பெயர்களால் பல்வேறு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றன. அவைகளும் உயிர் மற்றும் மெய் என முப்பது எழுத்துக்களையே கொண்டிருந்தது. நடப்பு நிலையில் இன்றைய தமிழும்; உயிர் மற்றும் மெய் என முப்பது எழுத்துக்களையே முதல் எழுத்துக்களாக கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. 3500 ஆண்டுகள் தொடங்கி இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு அயலவர் வரவால், இந்தியாவில் இன்றைக்கு இருக்கிற அத்தனை மொழிகளும் தமிழில் இருந்தே தோற்றம் பெற்றன. வடக்கே ஐநூறு ஆண்டுகளுக்கு முன்தோன்றிய கலவை மொழி ஹிந்தி ஆகும். அதே காலக்கட்டத்தில் தெற்கே தோன்றிய அண்மை மொழி மலையாளம். இந்தியாவின் அத்தனை மொழிகளும் தமிழையொட்டி தங்கள் மொழிக்கான எழுத்துக்களை ஒலியன் எழுத்துக்களாக அமைத்துக் கொண்டன. தாங்கள்ஒலிப்பில்- தங்களை இன்னும் நுட்பமானவர்கள் என்று காட்டிக் கொள்ள க,ச,ட,த,ப எழுத்துக்களில் ஒவ்வொன்றிலும் நான்கு நான்கு ஒலிப்புகளைக் கட்டமைத்துக் கொண்டன. ஆனால் தமிழில் இருக்கிற அளபெடைகளையோ, மாத்திரை அளவுகளையோ எழுத்துக்களை உயிர் மற்றும் மெய் என்று தலைப்பிடுகிற இயல்கணிப்பையோ கொண்டிருக்கவில்லை. தமிழ் அல்லாத இந்திய மொழிகள் அனைத்தும் இந்தோ ஐரோப்பிய மொழிகளின் இந்தோ ஈரானிய மொழிகள் என்று பட்டியல் இடப்படுகிறது. இந்த இந்தோ ஈரானிய மொழிகளான இந்திய மொழிகள்- அரபு மற்றும் பாரசீகத்தின் சொல்லடிப்படைகளை ஏற்றும், எழுத்துக்கள் உருவாக்கத்தில் தமிழ் அடிப்படையை ஏற்றும் இரட்டை வண்டிகளில் பயணிப்பது மாதிரியான அடிப்படையைக் கொண்டவைகள். இந்திய-ஐரோப்பிய மொழிகள் ஒரே வேர்ச்சொல்லை கொண்டிருக்கும் போது எழுத்து வடிவத்தில் மட்டும் மாற்றம் ஏன் என்பதற்கான காரணம் இதுவேயாகும்.
3. ஒவிய எழுத்து.
2. ஆங்கிலமுறை எழுத்து
1. ஒலியன் எழுத்து
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,608.