ஆறு நாட்களில் என்னுடைய வாழ்க்கையை மாற்றுவது எப்படி? இப்படி, வேறுஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அளித்த விடையை இங்கு கட்டுரையாக்கியுள்ளேன். 14,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: 'முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இயல்பெனெ மொழிப இயல்பு உணர்ந்தோரே” என்று பாட்டனார் தொல்காப்பியர், அவருக்கு அவரது காலத்திற்கு முன்பு வாழ்ந்த இயற்றமிழ் அறிஞர்கள் (சயின்டிஸ்ட்ஸ் ஆப் தமிழ்) தெரிவித்ததாக தனது தொல்காப்பிய நூலில் தெரிவித்திருப்பார். நீங்கள் உங்கள் வாழ்க்கையை ஏதோ ஒரு வகைக்கு மாற்றுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளீர்கள். அதற்கான விதியை நீங்கள்தான் எழுதிக் கொள்ள வேண்டும் என்பதை தனி ஒன்றுகள் தொடங்கி நீங்கள் வரையிலும், உங்களுக்குப் பின்னாலும் தொடரும் அனைத்தும் ஆகிய காலங்களை ஒருங்கிணைத்து, உங்களுக்கான வெற்றியை ஈட்டித்தர அதற்கான பொறுப்பில் உள்ள விசும்பில் நீங்கள் எழுதுகின்றீர்கள் உங்களுக்கு மாற்றம் நடக்க வேண்டும் என்கிற விதியை. அதனைச் செயலாக்க எவ்வளவு காலஅளவு தேவைப்படுமோ அந்தக் காலஅளவை விசும்பு எடுத்துக்கொள்ளத்தானே வேண்டும். அதை நீங்கள் தீர்மானித்தால் உங்கள் பதிவை அது செயலாற்றுவதற்கு முன்னால் நீங்கள் கொடுத்த நாளில் உங்களுக்கு மாற்றம் நடக்கவில்லை என்று உங்கள் திண்மையை இழந்து விடுவீர்களே! அப்புறம் எப்படி எண்ணியது எண்ணியவாறே நடக்கும்? மற்றொரு குறள்: நாம் மாங்காய் விழ வைப்பதற்கு அன்றாடம் மரத்தடிக்குச் சென்று, ‘இந்த மரத்தில் இருந்து எனக்காக ஒரு மாங்காய் விழவேண்டும்’ ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி கேட்க வேண்டும். ஒருநாள் நீங்கள் வியப்படைகிற படிக்கு மாங்காய் விழும். அல்லது யாராவது உங்கள் வீட்டிற்கு வந்தவர்கள், அல்லது உங்கள் வீட்டில் இருப்பவர்கள், அல்லது அணில், அல்லது வெளவால் உங்களுக்கு அதைப்பறித்து போடும். உங்கள் கோரிக்கை மட்டும் நிறைவேறும். உங்கள் கோரிக்கையை நிறைவேற்றித்தரும் நபரோ, காலமோ உங்கள் தீர்மானத்திற்கு அப்பாற் பட்டது.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
என்று திருக்குறளில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் ஆறு நாட்களில் முடிய வேண்டும் என்பது எப்படி சாத்தியம்?
ஞாலங் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்
என்று தெரிவிக்கிறது.
ஆக எந்த செயலுக்கும் இடமும் காலமும் அடிப்படை.
மந்திரத்தால் மரத்திலிருந்து மாங்காய் விழ வைக்க முடியுமா? என்று கேட்டால் முடியும் என்பதுதான் விடை.
உங்கள் வீட்டில் ஒரு மாமரம் வளர்ந்திருக்கிறது. அந்த மரத்தில் நிறைய மாங்காய்கள் காய்த்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. ஒருநாள் நீங்கள் அந்த மரத்தடிக்குச் சென்று இந்த மரத்தில் இருந்து எனக்காக ஒரு மாங்காய் விழவேண்டும் கேட்கின்றீர்கள். மாங்காய் விழாது. அப்படி ஒரேயொரு முறை கேட்டு உலகத்தில் யாராலும் மாங்காய் விழ வைக்க முடியாது.
அப்படி விழவைத்துக் காட்டினால் அது வித்தை (மேஜிக்) அப்படி வித்தைக்காரர்கள் உலகத்தில் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மந்திரக்காரர்கள் அல்ல.
ஆனால் உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் மந்திரக்காரர்கள் தாம். நம் வாழ்க்கைக்காக நம் தலைஎழுத்தை நாம்தான் எழுதிக் கொள்கிறோம்.