Show all

தெப்பக்குளம் என்றால் என்ன? அது, மற்ற குளத்தில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

தெப்பக்குளம் என்றால் என்ன? அது, மற்ற குளத்தில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது? என்று வேறுஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு- விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

19,தை,தமிழ்த்தொடராண்டு-5125:

பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவும் நோக்கத்திற்காகவே கோயிலைப் பெரிதாகக் கட்டும் நடைமுறை தொடங்கப்பட்டது.
'நீர் சூழ்ந்தால் மக்களுக்கு அடைக்கலம் தருவதற்கானது கோயில்' என்கிற அடையாளத்தில் ஒவ்வொரு கோயிலிலும் அமைக்கப்படுகிற குளமே தெப்பக் குளம் ஆகும்.

தெப்பக் குளத்தின் நடுவிலும் சிறு கோயில் அமைக்கப்பட்டிருக்கும். பெருங்கோயில் மக்களுக்கு அடைக்கலம் ஆகிவிட்ட காலங்களில் அந்தத் தெப்பக்குளத்தில் அமைந்த கோயில் மட்டுமே தெய்வத்திற்கான இடம் ஆகும்.

மற்ற காலங்களிலும் தெப்பக் குளத்தில் அமைந்த கோயிலுக்கு பூசை செய்வதற்கு வசதியாக எல்லா கோயில்களில் இருக்கும் குளத்தில் ஒரு தெப்பமும் இருக்கும்.

அந்தக் குளம் தெப்பம் ஓட்டுவதற்கு தோதுபடும் வகையிலும் அமைக்கப்பட வேண்டும் என்பனவே தெப்பக் குளம் என்கிற தமிழ்ச்சொல்லில் பொதிக்கப்பட்ட பொருள் ஆகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,877.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.