Show all

தவறான புரிதல் இருக்குமிடத்தில் சொல்லப்படும் விளக்கங்கள் அர்த்தமற்றது என உணர்ந்திருக்கிறீர்களா?

வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட, தவறான புரிதல் இருக்குமிடத்தில் சொல்லப்படும் விளக்கங்கள் அர்த்தமற்றது என உணர்ந்திருக்கிறீர்களா? நான் அளித்திருந்த விடையே இந்தக் கட்டுரை.

06,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: நமது வட்டத்திற்கு தொடர்பில்லாதவர்கள் என்றால், நீங்கள் சொல்லுவது சரிதான். அவர்களுடைய தவறான புரிதல்களைப் பற்றிய கவலையும் இல்லை. அவர்களுக்கு விளக்கங்கள் சொல்ல வேண்டிய தேவையும் நமக்கு இல்லை.

தமிழர்களுக்கு கிறித்துவ மதம், முகமதிய மதம், சீக்கிய மதம், கான்பூசியஸ் மதம், பௌத்த மதம், சமனமதம் குறித்து எந்தக் கவலையோ அதில் தவறான புரிதல்கள் இருப்பதாக யாராவது சொன்னாலும் அதைப்பற்றி கவலை கொள்ள வேண்டிய கட்டாயமோ எதுவும் இல்லை.

ஆனால் ஹிந்துமதம் கொண்டிருக்கிற பல்லாயிரக் கணக்கான தவறான புரிதல்களை நாம் விளக்கம் சொல்லாமல், அவர்களுக்கு விளக்கம் சொல்லுவது பொருளற்றது (அர்த்தமற்றது) என்று விட்டுவிட முடியாது.

இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழர்கள் யாரும் ஒன்றிய ஆட்சிக்கு முயலாத காரணத்தால், நிறைய தவறுகள் காங்கிரசாலும், பாஜகவாலும் முன்னெடுக்கப்பட்டு விட்டன, தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன.

என்தாய் எனக்கு ஊட்டிய தமிழையும், அது தருகிற பொருள் இலக்கணம் என்கிற வாழ்க்கை இலக்கணத்தையும் வைத்து என்னை அடையாளப் படுத்த விரும்புகிறேன்.

எனக்கு என் சமூகமாக கட்டமைத்த பொருள் இலக்கணம் உண்டு அதில் உரிப்பொருளாக தெய்வங்களும் உண்டு.

என்னுடைய கடவுள் என்பது: என்னைக் கடந்தும் எனக்கு உள்ளும் இருக்கிற வெளி-விண்வெளி-விசும்பு என மூன்று நிலைகளில் தொடர்கிற, நான் தரும் இயக்கத்தால் என்னை இயக்கும் ஆற்றல் என்பதாக எனக்கு புரியும் படிக்கு தெளிவாகச் சொல்லுகிறது என் பொருள் இலக்கணம்.

மேலும் இறை என்பன: நிலம் நீர் காற்று தீ என்கிற நாற்திர ஆற்றல்கள் என்றும்,

தெய்வம் என்பன: கடவுளும்; இறையும் தொய்ந்த என் பெற்றோர் என் முன்னோர் எம் இனத்தலைவர்கள் என்றும் என் பொருள் இலக்கணம் சொல்லுகிறது.

எனக்கு தனி மனிதர்கள் முன்னெடுத்த எந்த மதத்தையும் பின்பற்ற வேண்டிய தேவை எழவில்லை.


ஆனால்- இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழர்கள் யாரும் ஒன்றிய ஆட்சிக்கு முயலாத காரணத்தால், என் பள்ளிச் சான்றிதழில் என் மதம் ஹிந்து என்று குறிக்கப்பட்டு விடுகிறது.

நான் ஹிந்து இல்லையென்று சொன்னால் அப்படியானால் நீ- கிறித்துவ மதம், முகமதிய மதம், சீக்கிய மதம், கான்பூசியஸ் மதம், பௌத்த மதம், சமனமதம் இதில் எந்த மதம் என்று கேட்கப்படுகின்றது.

என் மக்கள், என் அரசியல்வாதிகள் இந்திய ஒன்றிய ஆட்சிக்கு முனைந்து நான் எனது அடையாளத்தை தமிழ் என்ற தலைப்பிட அதிகாரம் பெற்றுத் தரும் வரை-

என்னை எனது அனுமதியில்லாமலே ஹிந்து என்கிற பட்டியலில் அடைக்க முற்படும் வரை-

ஹிந்து மதத்தின் அருவருப்பு பாலியல், விலங்கு புணர்ச்சி குறித்த புளுகு கதைகளையெல்லாம் முன்னெடுக்கும்; தொன்மங்கள் மீது என்னுடைய விளக்கம் (பொருளுடையது என்றே) தொடர்ந்துகொண்டே இருக்கும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,045.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.